சென்னை கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக நிர்வாகி V.S. பாபு, தீவிர மூச்சுத் திணறல் காரணமாக கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த சிறப்பு மருத்துவர்கள் குழு, உடனடியாக அவருக்குத் தேவையான தீவிர சிகிச்சைகளை வழங்கி தொடர்ந்து கண்காணிப்பில் வைத்து பராமரித்து வருகிறது.
தற்போது அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், V.S. பாபு அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், சிகிச்சையின் மூலம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அசம்பாவிதங்களைத் தவிர்க்க சிறப்பு மருத்துவர்கள் குழு அவரது ஆரோக்கிய நிலையைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
