துணிச்சலா? அத்துமீறலா?… வனக்காவலரை இளைஞர்கள் சூழ்ந்து அடித்தது ஏன்?… பின்னணியில் இருக்கும் பகீர் வீடியோ…!!!

By Rajeshwari on மாசி 28, 2026

Spread the love

சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்டத்தில், வனத்துறை காப்பாளர் ஒருவர் உள்ளூர் இளைஞர்களால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காப்பகத்திற்குச் சொந்தமான நாற்றுப்பண்ணை ஒன்றில், அந்த வனக்காவலர் தனது தோழியுடன் தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள், வனக்காவலரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அந்த வனக்காவலரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

   

“>

   

மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த வனக்காவலரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களைத் தேடி வருகின்றனர்.

 

இந்நிலையில் அரசு ஊழியர் ஒருவர் பணி நேரத்தில் அல்லது அரசு வளாகத்திற்குள் இத்தகைய சூழலில் இருந்ததும், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டதும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மாவட்ட வனத்துறை அதிகாரிகளும் இது குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.