டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது 22 வயது ஜப்பானிய பெண் சுற்றுலாப் பயணி ஒரு கும்பலால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விருந்தினரே தெய்வம் என்ற உயரிய பண்பாட்டைக் கொண்ட நம் நாட்டில், ஒரு வெளிநாட்டுப் பெண்ணிற்கு நேர்ந்த இந்த அவமரியாதை இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தது.
இந்த வழக்கில் டெல்லி காவல்துறை உடனடியாகச் செயல்பட்டு, வீடியோவில் தெரிந்த நபர்களை அடையாளம் கண்டு மூன்று பேரைக் கைது செய்தது அவர்களில் ஒருவர் சிறுவன். பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்காமலேயே, அந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் ‘டெல்லி போலீஸ் சட்டத்தின்’ கீழ் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
अतिथि देवो भवः, होली एक सांस्कृतिक त्योहार!!
इस जापानी टूरिस्ट के साथ होली पर ये सब हुआ।
22 साल की लड़की ! भारत दर्शन करने आई थी !
क्या सजा हुई इस मामले में ?
सजा कोई नजीर बन सकी ?
दिल्ली में हुआ था ये सब… सिर्फ 3 साल पहले…
क्या आज, कोई नेता, मंत्री, आवाज उठा सकते हैं कि… pic.twitter.com/GsU5vRTEdg— Abhishek Anand (@TweetAbhishekA) February 27, 2026
“>
இது போன்ற சம்பவங்கள் ஒரு தனிப்பட்ட மாநிலத்தின் பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் மனப்போக்கைக் கேள்விக்குள்ளாக்குகிறது. திருவிழாக்கள் என்பது மகிழ்ச்சியைப் பகிரவே தவிர, ஒருவரின் அனுமதியின்றி அவர் மீது வன்முறையையோ அல்லது அத்துமீறலையோ பிரயோகிக்க அல்ல. கோபித்துக் கொள்ளாதீர்கள், இது ஹோலி என்ற வாசகத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு பெண்களிடம் தவறாக நடப்பதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
இந்நிலையில் தற்காலத்தில் பல அரசியல் தலைவர்களும், அமைச்சர்களும் ஹோலி பண்டிகையின் போது பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும், அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டு வருகின்றனர்.
இது குறிப்பாக, டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநில காவல்துறையினர் தற்போது ஹோலி சமயங்களில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தனிப் படைகளை அமைத்துள்ளனர். கலாச்சாரம் என்பது பிறரை மதிப்பதில்தான் அடங்கியுள்ளது சட்டமும் சமூகமும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இது போன்ற “நோய்களை” நம் சமூகத்திலிருந்து வேரறுக்க முடியும்.
