12 வருஷம் ஆயிடுச்சு கண்ணம்மா.. திருமணம் என் வாழ்க்கையில் எடுத்த சரியான முடிவு.. திருமண நாளில் பிரசன்னா போட்ட உருக்கமான பதிவு..!

By Mahalakshmi on வைகாசி 11, 2024

Spread the love

திருமணமாகி 12 ஆண்டுகள் நிறைவானதை தொடர்ந்து நடிகர் பிரசன்னா வெளியிட்டிருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். பாக்கியராஜ்-பூர்ணிமா, ரஜினி லதா, அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா என சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி தமிழ் சினிமாவில் க்யூட் தம்பதிகளாக வளர்ந்தவர்கள் தான் சினேகா பிரசன்னா ஜோடி.

   

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என அழைக்கப்பட்டு வரும் சினேகா விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிறமொழிகளிலும் நடித்துள்ளார். தனது சிரிப்பாலே அனைவரையும் கவர்ந்த இவர் தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார் .

   

 

இவரை போலவே தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வளர்ந்தவர் தான் நடிகர் பிரசன்னா. தமிழில் வில்லன், நடிகர், துணை நடிகர் என தொடர்ந்து சிறப்பான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் கடந்து 2009 ஆம் ஆண்டு வெளிவந்த அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள்.

பின்னர் இருவரும் காதலித்து 2012 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு விகான் என மகனும், ஆத்யந்தா என்ற மகளும் இருக்கிறார்கள். கடந்த 12 வருடங்களுக்கு மேலாக இருவரும் ஒற்றுமையாக சிறந்த தம்பதியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் தங்களுடைய திருமண நாளை முன்னிட்டு பதிவு ஒன்றை பிரசன்னா வெளியிட்டு இருக்கின்றார்.

அதில் நீ எப்போதுமே சரியாக இருக்கிறாய் என்று நான் ஆச்சரியப்படும்போது, நீ எப்போதும் எனது வலது புறத்தில் இருக்கிறாய் என்பதை உணர்ந்தேன். அதுதான் என் வாழ்க்கையில் நான் எடுத்த மிக சரியான முடிவு. பன்னிரண்டு வருடங்கள் முடிந்து விட்டது. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் கண்ணம்மா என்று பகிர்ந்திருந்தார். அத்துடன் தனது மனைவி சினேகாவுடன் எடுத்துக் கொண்டு அழகிய புகைப்படங்களையும் பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார்.