வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் கார்த்தி. பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே சவாலான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து ஹிட் கொடுக்க முன்னணி ஹீரோவாக உயர்ந்தார் கார்த்தி.
கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகவும் ஹிட்டாக அமைந்தது. இந்த மூன்று படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதிலும் பொன்னின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து பலரின் ஃபேவரிட் நடிகராக மாறிவிட்டார் கார்த்திக்.
ஆனால் இவர் நடிப்பில் வெளியான ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்த திரைப்படத்தை எப்படியாவது ஹிட் படமாக கொடுத்துவிட வேண்டும் என்பதற்காக தீவிரமாக நடித்து வருகிறார் கார்த்தி. ஜப்பான் படத்திற்கு பிறகு நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்திக் தன்னுடைய 26 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கின்றார். இந்த படம் கமர்சியல் படமாக உருவாக்கி வருகின்றது. சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட சிறப்பான திரைப்படங்களை கொடுத்த நலன் கார்த்திகேயனுடன் இணைந்து இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்திற்கு வா வாத்தியாரே என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் சூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 20 நாட்களில் ஷூட்டிங் முடிவடையும் என்றும், அதனை தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹீரோயினியாக கீர்த்தி செட்டி நடித்துள்ளார். இவருக்கு வயது 20. கார்த்திகை விட 26 வயது குறைவானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால் கார்த்திக் நடிக்கும் 26 வது படத்திற்கு தன்னைவிட 26 வயதுக்கு குறைவான நடிகையுடன் நடித்து வருகிறார். இதை பார்த்த பலரும் ஆஹா என்ன ஒரு ஒற்றுமை என்று கூறி வருகிறார்கள்.