நண்பனின் ‘ஸ்டார்’ படத்தை காதலியுடன் பார்க்க வந்த பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி.. வைரல் புகைப்படம்..!

By Mahalakshmi on மே 11, 2024

Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான பிரதீப் ஆண்டனி தனது காதலியுடன் கவின் நடித்த ‘ஸ்டார்’ படத்தை பார்க்க சென்றுள்ள போது எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் சீசன் 7 போட்டியாளராக பங்கேற்றவர் பிரதீப் ஆண்டனி.

   

இவர் மற்ற போட்டியாளர்களை டார்கெட் செய்து அநாகரிகமான வார்த்தைகளையும், எல்லை மீறி நடந்து கொண்ட காரணத்தினால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த எவிக்ஷன் சரியானது இல்லை என்று மக்கள் பலரும் கூறி வந்தனர். ஆனால் ஒரு வழியாக இந்த சீசன் முடிவடைந்தது. பிக் பாஸ் டைட்டில் வின்னராகி இருந்தால் கூட பிரதிப் இவ்வளவு பிரபலம் இருக்க மாட்டார்.

   

 

ரெட்கார்ட் கொடுத்து வெளியே வந்த பிறகு பிரதீப்பிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துவிட்டது. இந்நிலையில் பிரதீப் ஆண்டனி தன்னுடைய  காதலியை சமீபத்தில் அறிமுகம் செய்து இருக்கின்றார். இந்நிலையில் தனது காதலியுடன் பிரதீப் கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படத்தை பார்ப்பதற்கு சென்றிருந்தார்.

நடிகர் கவினும் பிரதீப்பும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். தனது நண்பனின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதற்காக சென்றிருக்கின்றார் பிரதீப். நடிகர் கவின் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் தான் ஸ்டார். இந்த திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கின்றது. பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கிய இலன் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார்.

இதில் கவினுக்கு ஜோடியாக லால், அதிதி போங்கர், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் இருக்கும் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. இந்நிலையில் தனது காதலியுடன் பிரதீப் ஆன்டனி படம் பார்க்க சென்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.