Categories: CINEMA

சரத்பாபு என் கணவரா…? நம்பியாருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்..? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சினேகா நம்பியார்..!!

தென்னிந்திய சினிமாவில் 1970-களில் தொடங்கி 1990-வரை சாக்லேட் பாயாக நடித்த பிரபலமானவர் சரத்பாபு. இவர் நடித்த பணக்கார பையன், நண்பன் போன்ற திரைப்படங்கள் இவரை பிரபலமாக்கியது. கடந்த 1977-ஆம் ஆண்டு வெளியான பட்டின பிரவேசம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சரத்பாபு நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் நிழல் நிஜமாகிறது என்ற படத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்தார். கடைசியாக தமிழில் வசந்த முல்லை என்ற படத்தில் நடித்துள்ளார்.

சுமார் 50 வருடங்களுக்கு மேலாக 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக செப்சிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட சரத்பாபு சமீபத்தில் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வந்தனர். சரத்பாபுவின் முதல் மனைவி நடிகை ரம்பா பிரபா சில பிரச்சனைகள் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து சென்று விட்டார். அவர்கள் 14 வருடங்கள் இணைந்து வாழ்ந்தார்கள். இதனையடுத்து சரத் பாபு நம்பியாரின் மகள் சினேகாவை இரண்டாவதாக திருமணம் செய்தார்.

இருவரும் 25 ஆண்டுகளுக்கு மேலாக கணவன் மனைவியாக வாழ்ந்தனர். இது தொடர்பாக சினேகா நம்பியார் ஒரு பேட்டியில் கூறியதாவது, என்னுடைய அப்பா பெயர் நம்பியார். நம்பியார் என்பது ஜாதியை குறிக்கும். இது கண்ணூரில் இருக்கக்கூடிய மிகச் சிறிய ஜாதி குழு. நான் சினிமாவில் நடிக்க சென்னைக்கு வந்த போது சினேகா என்ற பெயரில் நிறைய பேர் இருந்தார்கள். இதனால் எனது பெயருக்கு பின்னால் அப்பாவின் பெயரை சேர்த்து சினேகா நம்பியார் என மாற்றிக் கொண்டேன்.

இதனால் எல்லாரும் என்னை நம்பியாரின் மகள் என நினைத்து கொண்டார்கள். அது மட்டுமில்லாமல் நம்பியாரின் மகள் பெயரும் சினேகா நம்பியார் தான். உண்மையில் நான் நம்பியாரின் மகள் அல்ல. சமீபத்தில் உயிரிழந்த நடிகர் சரத்பாபுவின் இரண்டாவது மனைவியும் அல்ல. சமூக வலைதளத்தில் எனது புகைப்படத்தை பதிவிட்டு நான் அவரது இரண்டாவது மனைவி என எழுதி இருக்கிறார்கள். நியூஸ் சேனல்களிலும் நான்தான் சரத்பாபுவின் இரண்டாவது மனைவி என கூறுகிறார்கள்.

 

அதிலும் சிலர் நான் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டேன் என சர்ச்சையை கிளப்பி உள்ளனர். இதெல்லாம் பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒருமுறை என்னை தொடர்பு கொண்டு கேட்டிருந்தாலே உண்மை தெரிந்து இருக்கும். ஆனால் யாரும் என்னிடம் இதைப் பற்றி கேட்காமல் தவறாக சமூக வலைதளத்தில் சித்தரித்து உள்ளனர். இதை நான் எடுத்துக் கொண்டது போல எனது குடும்பமும் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தயவு செய்து இது மாதிரியான தவறான செய்திகளை பரப்பாதீர்கள் என வேதனையுடன் கூறியுள்ளார்.

Priya Ram
Priya Ram

Recent Posts

கல்கி படத்திற்கும் பகத் பாஸுலுக்கும் கனெக்ஷன் இருக்கா..? இது என்ன புது கதையா இருக்கு..!!

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான கல்கி 2898 ஏடி திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த…

2 நிமிடங்கள் ago

வெள்ளி விழா படங்களை கொடுத்தும்.. நடிகர் சிவகுமார் கடைசிவரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

நடிகைகள் சிவகுமார் பிரபல நடிகராக இருந்தும் அவர் கடைசி வரை வாங்கிய சம்பளம் குறித்த தகவல் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

49 நிமிடங்கள் ago

என்னது இது ஆதி காலத்து பேரா இருக்கு.. இதெல்லாம் செட் ஆகாது.. பிரபல நடிகையின் பெயரை மாற்றிய எம்.ஆர்.ராதா..!!

நடிகை கே.ஆர் விஜயா சுமார் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி…

50 நிமிடங்கள் ago

திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம்.. அங்கு நடந்த சம்பவத்தை மெய்மறந்து பார்க்க நடிகை பிரியா ஆனந்த்.. வைரல் வீடியோ..!

நடிகை பிரியா ஆனந்த் திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அங்கு படுகர் இன மக்கள் நடனமாடிய காட்சியை…

1 மணி நேரம் ago

தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமுக்கு மகளாக நடித்த குழந்தையா இது..? இப்ப எப்படி இருக்காங்க பாருங்களே..

தெய்வத்திருமகள் திரைப்படத்தில் விக்ரமுக்கு மகளாக நடித்திருந்த குழந்தை சாரா அர்ஜுனின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ்…

2 மணி நேரங்கள் ago

33 வயதில் குருவாயூர் கோயிலில் காதலனை கரம் பிடித்த மீரா நந்தன்.. வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்..!

தமிழ் மற்றும் மலையாள மொழியில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை மீரா நந்தன் இன்று காலை குருவாயூர் கோயிலில்…

3 மணி நேரங்கள் ago