மகளிர் தினத்தை முன்னிட்டு தனது கடையில் வேலை செய்யும் பெண்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை சினேகா.! வைரலாகும் வீடியோ..

By Ranjith Kumar on பங்குனி 14, 2024

Spread the love

தமிழ் திரையுலகில் ‘என்னவளே’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சினேகா. குறிகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து  முன்னணி நடிகையாக உயர்ந்தார். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே நடிகர் பிரசன்னாவை அச்ச உண்டு அச்ச உண்டு என்ற படம் மூலம் நண்பர்களாக பழகி பின்னர் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஆத்யந்தா, விஹான் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு திரை வாழ்க்கை விட்டு சற்று விலகி இருந்த நடிகை சினேகா தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘பட்டாசு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சினிமா மட்டுமின்றி  சினேகா சொந்தமாக பல பிஸினஸ்களையும் செய்து வருகிறார்.

   

அதில் ஒன்று தான் தற்பொழுது புதிதாக தொடங்கப்பட்ட ‘சினேகாலயா சில்க்ஸ்’ என்கிற துணிக்கடை.   தற்போது தனது துணிக்கடையில் உள்ள வேலை செய்யும் அனைத்து பெண் ஊழியர்களையும் அழைத்து மிக க்ராண்டாக மகளிர் தினம் கொண்டாடியுள்ளார். சினேகா ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தற்போது வரை பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஊக்கமூட்டும் நிறைய விஷயங்கள் தற்போது வரை செய்து வருகிறார். அந்த வகையில் தான் பெண்களுக்காகவே சினேகா சில்க்ஸ் என்ற துணிக்கடையை திறந்து அதில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடத்தி வருகிறார்.

   

தற்போது மகளிர் தினம் ஒட்டி தன் உடன் வேலை பார்க்கும் அனைத்து பெண் ங்களையும் அழைத்து கேக் வெட்டி மகளிர் தினத்தை மிக பிரம்மாண்டமாக கொண்டாடி, அனைத்து பெண்களுக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகிறார் சினேகா.

 

 

View this post on Instagram

 

A post shared by SnehalayaaSilks (@snehalayaasilks)