இப்படி ஒரு காம்போல படம் வந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? SJ சூர்யா இயக்கத்தில் சிம்பு & அசின் நடிக்க இருந்த ‘A.C’..

By vinoth

Published on:

தமிழ் சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையோடு வந்தவர் எஸ் ஜே சூர்யா. ஆனால் அந்த வாய்ப்பு அவரின் தொடக்க காலத்தில் கிடைக்காததால் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பாரதிராஜா, வசந்த, லிவிங்ஸ்டன் , ஜேடி ஜெர்ரி என பலரிடம் பணியாற்றிய அவரின் அர்ப்பணிப்பைப் பார்த்த அஜித் அவருக்கு வாலி படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.

வாலி படத்தில் ஒரு வித்தியாசமான அஜித்தை திரையில் காட்டினார் எஸ் ஜே சூர்யா. அதிலும் வில்லன் வேடத்தில் நடித்திருந்த அஜித்தின் கதாபாத்திரம் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து விஜய்யை வைத்து குஷி என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதையடுத்து குஷி படத்தை தெலுங்கு மற்றும் இந்தியிலும் இயக்கி வெற்றி இயக்குனராக வலம்வந்தார்.

   

இப்போது அவரின் நடிப்பு ஆசை மீண்டும் முளைவிட அடுத்து நியூ என்ற படத்தை இயக்கி நடித்தார். அந்த படமும் ஹிட்டானது. அதன் பின்னர் அன்பே ஆருயிரெ திரைப்படம் சுமாரான கவனத்தைப் பெற்றது. தொடர்ந்து நடிக்க ஆரம்பித்த அவர் இடையில் நடிகர் சிம்புவை வைத்து ஏ சி என்ற படத்தை இயக்க இருந்தார்.

asin and simbu

சிம்பு மற்றும் அசின் ஆகியோரை முக்கியக் கதாபாத்திரத்தில் வைத்து இந்த படத்தை அவர் உருவாக்க இருந்தார். இதற்காக இருவரையும் வைத்து வித்தியாசமான போட்டோஷூட் எல்லாம் நடத்தினார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் எல்லாம் வெளியாகின. அருணாச்சலம் vs சித்ரா என்பதை சுருக்கி A C என்று தலைப்பு வைக்கப்பட்டது.

ஆனால் இந்த படம் ஒருநாள் கூட ஷூட்டிங் தொடங்காமல் கைவிடப்பட்டது. எஸ் ஜே சூர்யா, அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட்டானதால் இந்த டிராப் ஆனதாக சொல்லப்படுகிறது. இந்த படம் உருவாகி இருந்தால் அது கண்டிப்பாக ஒரு வித்தியாசமான படமாக இருந்திருக்கும் என்று  ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

author avatar