கொஞ்சம் மிஸ் ஆகிருந்தா அஜித்துக்கு பக்கவாதம் வந்துருக்கும்.. பகிர் கிளப்பிய டாக்டர்..

By Ranjith Kumar on பங்குனி 13, 2024

Spread the love

மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படம் சிறிது காலம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால், அஜித் மீண்டும் உலக சுற்றுலா செல்லலாம் என்று துபாயில் உள்ள தன் பைக்கை தயார் செய்ய சொல்லி இருந்தார். அதற்கான வேலையை மிக விறுவிறுப்பாக நடத்தி வந்த நிலையில், திடீரென அஜித்தின் உடல்நிலை சரியில்லாமல் போக, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த சமயத்தில் பல வதந்திகள் பரவி வந்தன.


அஜித்திற்கு மூலையில் கட்டி இருப்பதாகவும், அது கடந்த சில மாதங்களாகவே அவருக்கு தொந்தரவாக இருந்து வந்து நிலையில் தற்போது கண்டறியப்பட்டு அதை அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கப்பட்டுள்ளது என்றும், இதற்காக சிறந்த மருத்துவர்கள் மதுரை மற்றும் கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்டார்கள் என்று, பல வதந்திகள் பரவி வந்தன. ஆனால் இதை எல்லாம் பொய் என்று அஜித்தின் மேலாளர் சுரேஷ் தெரிவித்து இருந்தார். அஜித்திற்கு வெறும் காது ஓரம் நரம்பு பிரச்சனை மட்டும்தான் உள்ளது, வேறு எதுவும் இல்லை, அதுவும் தற்போது சிகிச்சை பெற்று அவர் நலமாக இருக்கிறார, என்று தெரிவித்திருந்தார்.

   

தற்போது அஜித்துக்கு சிகிச்சை செய்த மருத்துவர், அவருக்கு நேரிட்ட மாபெரும் பிரச்சினை பற்றி வெளிப்படையாக பேசி உள்ளார்; அதாவது அஜித்துக்கு கழுத்தில் இருந்து முதுகு தண்டு அடிப்பாகம் வரை மூன்று எலும்புகள் பாதிக்கப்பட்டு நரம்பு சிதைவு ஏற்பட்டுள்ளதாம், அதை ஒவ்வொரு முறையும் தனித்தனியாக சிகிச்சை செய்து அவரை குணப்படுத்தி உள்ளார்களாம். அது மட்டும் இல்லாமல் அவருக்கு நீண்ட நாட்களாக முட்டியில் இணைந்திருக்கும் எலும்பில் சிதைவு ஏற்பட்டிருந்ததாம், அதை தற்போது சிகிச்சை செய்து சரி செய்துள்ளார்கள்.

   

ஆனால் முதுகில் ஏற்பட்ட நரம்பு சிதைவால் ஆபரேஷன் செய்யாமல் இருந்திருந்தால், அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு உடலை மறுத்துப் போய் இருக்கலாம் அல்லது கோமாவிற்கே போயிருக்கலாம் என்று மருத்துவர் தெரிவித்திருக்கிறார். ஆனால் சரியான சமயத்தில் அவருக்கு சிகிச்சை கொடுத்து அவரின் நோயை குணப்படுத்தி உள்ளார்களாம் மருத்துவர்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Surendhar (@thala_ajith_fans_tamil)