Connect with us

TRENDING

வடை சாப்பிட்ட பில் கேட்ஸ்.. தோசை கேட்ட ஷாருக்கான்… அம்பானி வீட்டு விசேஷத்தில் கலக்கிய தமிழர்..

Rihanna at ambani wedding

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தன் காதலி ராதிகாவை திருமணம் செய்ய உள்ளார். இவர்களின் திருமணம் ஜூலை மாத நடக்க உள்ள நிலையில், ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிகள் ஜாம்நகரில் சமீபத்தில் நடைபெற்றது. பேஸ்புக் நிறுவனர் மார்க் தொடங்கி பில் கேட்ஸ், பாப் பாடகி ரிஹானா, பல முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

   

Arusuvai arasu shridhar and mukesh ambani

மூன்று நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 2500 உணவு வகைகள் இடம்பெற்றதாம். இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலத்தை சேர்ந்த உணவுகள் மட்டுமின்றி சைனீஸ், காண்டினெண்டல் என பல வகையான உணவுகள் பரிமாறப்பட்டது. குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த அறுசுவை அரசு ஸ்ரீதரின் கேட்டரிங் டீமும் இடம்பெற்றது.

Mukesh and nita ambani

அங்கு வந்த பலரும் நம் தமிழ் உணவை விரும்பி சாப்பிட்டுளார்கள். இதுகுறித்து ஸ்ரீதர் கூறியுள்ளதாவது, முகேஷ் அம்பானியை எங்களுக்கு பத்து வருடங்களுக்கு முன்பாக இருந்தே தெரியும். முகேஷ் நம் உணவை விரும்பி சாப்பிடுவார். இட்லி, ஊத்தாப்பம், சக்கரை பொங்கல் தான் முகேஷின் பேவரைட். நீதா அம்பானி சாம்பார் விரும்பி சாப்பிடுவார் ஆனால் அவருக்கு புளி, தக்காளி, எலுமிச்சை எந்த உணவிலும் சேர்க்க கூடாது. அம்பானியின் மூன்று பிள்ளைகளும் நல்ல அடக்கமானவர்கள்.

Anant ambani and radhika merchant

Aishwarya Rai Bachchan in anant ambani wedding

மாப்பிள்ளை ஆனந்த் அம்பானி மசாலா தோசை விரும்பி சாப்பிடுவார், அதேபோல் மணப்பெண் ராதிகாவும் இட்லி, தோசை தான் அதிகமாக சாப்பிட்டார். நம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்துடன் அம்பானி திருமண விழாவிற்கு வந்திருந்தார். அவர்களும் நம் உணவை தான் சாப்பிட்டார்கள். இரவு 2 மணி இருக்கும், ஷாருக்கான் அழைத்தார் எனக்கு தோசை தான் வேணும் என கேட்டு விரும்பி சாப்பிட்டார். அதேபோல் தீபிகா படுகோன் அழைத்து இட்லி கேட்டார். ஐஸ்வர்யா ராய்க்கு ரவா தோசை என்றால் கொள்ளை பிரியம். நன்றாக வாங்கி சாப்பிடுவார். அபிஷேக் பச்சனும் அப்படிதான் நம் தமிழ் உணவுகள் தான் அவர்களின் பேவரைட்.

Bill gates in anant ambani wedding

எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது பில் கேட்ஸ் தான். வடை கேட்டு விரும்பி சாப்பிட்டவர், இரண்டு வடைகள் வேண்டும் என கேட்டார். வெளிநாட்டவர் அவருக்கே நம் தமிழ் உணவு தான் மிகவும் பிடித்திருந்தது. அம்பானி திருமணத்தில் நம் உணவு இருந்தது பெருமையாக இருந்தது என கூறியுள்ளார் அறுசுவை அரசு ஸ்ரீதர்.

author avatar
Deepika
Continue Reading

More in TRENDING

To Top