மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள பிம்ப்ரி-சின்வாத் பகுதியில் உள்ள தபோடி பகுதியில், இருசக்கர வாகன ஓட்டுநர் ஒருவரின் பைக்கில் திடீரெனப் பாம்பு ஒன்று பதுங்கியுள்ளது. பைக்கின் ஹெட்லைட் பகுதிக்குள் பாம்பு சுருண்டு படுத்திருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வாகன உரிமையாளர், உடனடியாக வனவிலங்கு மற்றும் பறவைகள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் வீரர் ஜெயவர்தன் காம்பிளேவிற்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர், மிகவும் எச்சரிக்கையுடன் போராடி பைக்கின் ஹெட்லைட் பகுதியைப் பிரித்துப் பாம்பை வெற்றிகரமாக மீட்டுள்ளார்.
பிடிக்கப்பட்ட பாம்பு இந்தியாவில் பரவலாகக் காணப்படும் நச்சுத்தன்மையற்ற ‘டிரின்கெட்’ (Trinket Snake) வகையைச் சேர்ந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு இதனால் எந்தவித ஆபாரமும் இல்லை என்றாலும், எலிகளைத் தேடி இது போன்ற குடியிருப்புப் பகுதி வாகனங்களுக்குள் பாம்புகள் நுழைவது வழக்கம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பொதுமக்களுக்குப் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்ட இப்பாம்பு, பின்னர் காயங்கள் ஏதுமின்றி அருகில் உள்ள வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
