விபரீதமாக மாறிய ரீல்ஸ் மோகம்..! கழுத்தில் விஷப்பாம்பை போட்டுகொண்டு வீடியோ வெளியிட்ட நபர்… அடுத்த நொடியே அரங்கேறிய கொடூரம்..!!

By Soundarya on ஆடி 18, 2025

Spread the love

மத்திய பிரதேசம் மாநிலம்  குணால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீபக் மஹாபார். 42 வயதான இவர் பாம்பு பிடி வீரர். அந்த பகுதியில் உள்ள பல்வேறு பாம்புகளை பிடித்து அனுபவம் உள்ளவர். இந்த நிலையில் பர்பத்புரா கிராமத்தில் கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாகவும் அதை பிடிக்குமாறும் அவருக்கு அழைப்பு வந்தது. இதனையடுத்து அங்கு சென்று அவர் அந்த பாம்பு லாவகமாக பிடித்தார். அப்போது பள்ளியில் படிக்கும் அவருடைய மகனை அழைத்து வருமாறு அவருக்கு வீட்டில் இருந்து போன் வந்துள்ளது .

இதனை அடுத்து கொடிய விஷமுள்ள அந்த பாம்பை அவர் தன்னுடைய கழுத்தில் போட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மகன் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு சென்றார். வழியில் தன்னுடைய கழுத்தில் பாம்பு கிடப்பதை செல்போனில் வீடியோ எடுத்தும் ரீல்ஸ் வெளியிட்டார். கழுத்தில் பாம்போடு மகனை அழைத்துக்கொண்டு வரும் வழியில் தீபக்  கையில் அந்த பாம்பு கடித்து உடல் முழுவதும் விஷம் ஏறியுள்ளது. இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.