ஒரே ஜாக்பாட்டா அடிக்குதுப்பா SK-க்கு.. OTT-யில் பல கோடிக்கு விற்பனை ஆன ‘அமரன்’..

By Ranjith Kumar on பங்குனி 7, 2024

Spread the love

கமல்ஹாசன் நிர்வாண ராஜ்கமல் கிளிமில் தயாராகி வரும் படம் தான் “அமரன்”. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி அவர்கள் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னால் படத்தின் பர்ஸ்ட் லுக், டைட்டில் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று மக்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை அள்ளிக் குவித்தது.

இந்தப் படம் ராணுவ களத்தில் நடக்கும் போர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. மறைந்த மேஜர் முகுந்தன் அவர்கள் ராணுவ களத்தில் நம் தாய் நாட்டிற்காக போர் புரிந்து உயிரை விட்ட இவரின் வாழ்க்கை சரிதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சிவகார்த்திகேயன் மிகக் கடுமையான ஆர்மி பயிற்சி அளிக்கப்பட்டு தன் உடலை வருத்திக்கொண்டு ட்ரைனிங் செய்து வருகிறார். அதற்கான புகைப்படம் கூட தற்போது வெளியாகி இணையத்தில் மிக வைரலாகி கொண்டிருந்தது.

   

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து போஸ் ப்ரோடக்ஷன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இப்படம் வெளியாகுவதற்குள் OTT தளங்கள் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு படத்தை வாங்க ஆரம்பித்து விட்டார்கள். அதில் நெட்பிக்ஸ் நிறுவனம் இப்படத்தை பல கோடி ரூபாய் கொடுத்து உரிமத்தை பெற்றுள்ளது.

   

கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் கொடுத்து இப்படத்தின் OTT காப்பிரைட்ஸ்யை வாங்கியுள்ளது. சிவகார்த்திகேயன் அவர்களுக்கு முதல் OTT தளத்தில் இவ்வளவு கோடி வசூலை பெற்றது இதுவே முதல் படம் ஆகும்.