மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பு நிறுவனமான நீளம் ப்ரொடக்ஷன் கம்பெனியில் துருவ் விக்ரம் அவர்கள் தற்போது நடித்து வருகிறார். இப்படம் தேசிய கபடி பிளேயர் பாண்டியன் அவர்களின் வாழ்க்கை சரிதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதால், இப்படம் கபடி களத்தை வைத்து மையமாக கதை செல்வதால் துரு விக்ரம் அவர்களுக்கு கடுமையான கபடி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது,
இந்த படத்திற்கான டைட்டிலையும் மத்த விஷயங்களையும் நீளம் ப்ரொடக்ஷன் சில நாட்களில் அப்டேட்டை வெளியிடுகிறோம் என்று தெரிவித்துள்ளார்கள். இப்படம் முடிந்தபின் துருவ் விக்ரம் அவர்கள் விஜயின் பையனான ஜெய்சன் சஞ்சய் அவர்களின் இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் நடிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்கள். ஆனால் தற்போது துரு விக்ரம் கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தின் இயக்குனரான “கணேஷ் கே பாபு” அவர்களின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இப்படத்தின் ஸ்டோரி டிஸ்கஷன் தற்போது நடைபெற்று வருகிறதாம்,
மாரி செல்வராஜ் படத்தை முடித்துவிட்டு டாடா பட இயக்குனர் கணேஷ் இயக்கத்தில் துருவ் விக்ரம் அவர்கள் இணைய உள்ளாராம். விஜயின் பையன் ஜெய்சன் சஞ்சய் அவர்களின் இயக்கத்தில் துருவிக்ரம் கதாநாயகனாக நடிக்கப் போவதாக தகவல் வெளிவந்த நிலையில், தற்போது ஜேசன் சஞ்சய் அவர்களின் கதையில் துரு விக்ரம் அவர்கள் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தான் நடிக்க உள்ளாராம், இவர் இப்படத்தில் ஹீரோ இவர் இல்லை என்று தகவல் கசிந்துள்ளது.
இதை தெரிந்த ரசிகர்கள் மிகவும் ஏமாற்றத்தில் வாடி உள்ளார்கள். இப்படத்தில் விஜய்யின் மகனான சஞ்சையும் இயக்கத்தில் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் ஹீரோவாகவும் சங்கரின் மகளான அதிதி சங்கர் ஹீரோயினாக நடிப்பதை தெரிந்த ரசிகர்கள், ஒரு படத்தில் 3 லேஜன்களின் வாரிசு இருப்பதை கண்டு மிகவும் ஆரவாரம் காட்டி வந்தார்கள், ஆனால் தற்போது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.
