48 கோடி views தாண்டியும் ஒரு ரூபா கூட வருமானம் இல்ல.. AR ரகுமான் பாடலுக்கே இந்த நிலைமையா.? மனம் திறந்த சந்தோஷ் நாராயணன்..

By Ranjith Kumar on பங்குனி 7, 2024

Spread the love

2021 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் தியா அவர்கள் குரலில் வெளிவந்த “என்ஜாய் என்ஜாமி” பாடல் பட்டி தொட்டி எல்லாம் பரவ ஆரம்பித்து மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது, இப்பாடல் சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக 2021 ஆம் ஆண்டு “என்ஜாய் எஞ்சாமி” என்ற பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து பாடகர் அறிவு வரிகள் எழுதி இவருடன் இணைந்து சந்தோஷ் நாராயணன் மகள் தீ பாடி வெளியாகி மக்கள் மத்தியிலும் குழந்தைகள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. உலகம் எங்கும் மூளை முடுக்கு எல்லாவற்றிலும் ஒழிக்கப்பட்ட பாடல், youtube-ல் 48 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இப்பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் சந்தோஷ் நாராயணன் இப்பாடல் சம்பந்தப்பட்ட விஷயங்களை பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

சந்தோஷ் நாராயணன் ; “என்ஜாய் என்ஜாய்” பாடல் வெளியாகி தற்போது வரை மூன்று ஆண்டுகளை கடந்து விட்டது. இப்பாடலின் முழு உரிமைமான ராயல்டி 100 சதவீதம் எங்களிடம் தான் உள்ளது. இப்பாடலுக்கான ஊதியத்தை எவ்வளவு சம்பாதித்து இருக்கிறோம் என்றால்? இதுவரை ஒரு ரூபா காசு கூட சம்பாதிக்காமல் ஜீரோவில் தான் உள்ளது. இதை தயாரித்த மஜா நிறுவனத்தை பலமுறை நாங்கள் தொடர்பு கொண்டும் எங்களுக்கு ஏற்ற தொகையும் இதுவரை வரவில்லை, அதற்கான சரியான பதிலும் இதுவரை அவர்கள் கொடுக்கவில்லை. இதைக் கேட்ட ரசிகர்கள் மஜா நிறுவனத்தின் தூதரான இசையமைப்பாளர் ஏ .ஆர் ரகுமான் அவர்களை பலரும் விமர்சித்து வந்தார்கள். அதற்காக சந்தோஷ நாராயணன் தற்போது பதிவு ஒன்று போட்டிருக்கிறார்.

   

அதில், என் அன்பார்ந்த ஏ.ஆர் ரகுமான் சார் அவர்களே, நீங்கள் இந்தப் பாடலுக்காக பெரிதும் உறுதுணையாக இருந்திருக்கிறீர்கள். இந்த மஜா பிரச்சனையில் உங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை, இருப்பினும் இதற்காக பலமுறை எங்களுக்கு ஆதரவாக வந்தீர்கள். இருந்ததற்கு மிக்க நன்றி சார். அறிவு, தீ, சுயதின கலைஞர்களுக்கும் எந்த ஒரு வருமானமும் கிடைக்கவில்லை, சுய தின கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். நான் மீண்டும் என்னுடைய வழிகாட்டி ஆன பா. ரஞ்சித், அறிவு அவர்களுடன் இணைந்து பணிபுரிவேன், அதற்காக எனக்கு மிக்க சந்தோஷம்.

   

இந்த சுயதின கலைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை உறுதி செய்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், என சந்தோஷ் நாராயணன் தெரிவித்திருந்தார். இந்த மஜா பிரச்சனைக்கும் ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இதிலிருந்து தெரிகிறது.