சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்று பிரபல காமெடியனாக வெற்றி பெற்ற தான் நடிகர் சிவகார்த்திகேயன். அதன்பிறகு தொலைக்காட்சி மூலமாக சினிமாவிற்குள் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் காரணமாக ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மெரினா படத்தின் மூலமாக அறிமுகமான இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் ஒரு இடத்தை பிடித்து உட்கார்ந்துவிட்டார்.
தற்போது இவர் நடிப்பில் பராசக்தி படம் உருவாக்கி வருகிறது. இந்நிலையில் இவர் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 2018-ல் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் காலமானார். அவர் மருத்துவமனையில் இருந்தபோது அவரை சந்தித்த சிவகார்த்திகேயன், அவரது மகன் சீனிவாசனின் படிப்புச் செலவை ஏற்பதாக உறுதியளித்திருந்தார். இந்த உறுதியை சிவகார்த்திகேயன் இன்றுவரை காப்பாற்றி வருவதாக இயக்குநர் இரா.சரவணன் கூறியுள்ளார். ஆண்டுதோறும் படிப்புக்கான பணத்தை அனுப்புவது மட்டுமல்லாமல், கல்வி குறித்தும் சிவகார்த்திகேயன் சீனிவாசனிடம் அடிக்கடி போனில் பேசுவாராம்.
