2 மாதங்கள் கழித்து ரசிகர்களுக்கு திடீரென இன்ப அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீ.. செம குஷியில் FANS.!

By Nanthini on ஆனி 18, 2025

Spread the love

சில மாதங்களுக்கு முன்பு இணையத்தை புரட்டிப் போட்டவர் தான் நடிகர் ஸ்ரீ. மாநகரம், வழக்கு எண், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ஸ்ரீ. இறுதியாக இறுகப்பற்று திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அந்தப் படத்திற்கு பிறகு சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார். திடீரென்று அவருடைய instagram பக்கம் பெரிய அளவில் வைரலானது.

தமிழ் நடிகர் ஸ்ரீ, வெளிப்படையான உள்ளடக்கத்தை இடுகையிட்ட பிறகு நடவடிக்கையில்  காணவில்லை, மருத்துவ சிகிச்சையில் இருப்பது ...

   

அதற்கு காரணம் அவருடைய உடல் தோற்றமும் அவர் போட்ட போஸ்ட்களும் தான். உடல் எடை மெலிந்து ஆழ் அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்ரீ வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகை சேர்ந்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அவர் எங்கே இருக்கிறார் என்பதை தேடி கண்டுபிடித்தன. பிறகு லோகேஷ் கனகராஜ், மன அழுத்தத்தில் ஸ்ரீ பாதிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு மருத்துவ சிகிச்சை நடந்து கொண்டிருப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

   

Actor Sri: நடிகர் ஸ்ரீ.. இவரைப் போய் போதைக்கு அடிமைனு சொல்லீட்டாங்களே..  மனுசன் என்ன சொல்றாருனு பாருங்க | Actor Sri Says He Was Quit Smoking Habit  Since 2024 New Video Goes ...

 

இப்படியான நிலையில் ஸ்ரீ தன்னுடைய நாவலை இன்று வெளியிடுவதாக instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மே ஐ இன் என்ற ஆங்கில நாவலை தான் எழுதி முடித்து வெளியிட்டு இருக்கிறார். அவருடைய நிலை குறித்து இவ்வளவு நாள் வருத்தப்பட்ட அவருடைய ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அந்த போஸ்ட் கொடுத்துள்ளது. இதனை தொடர்ந்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Shriram Natarajan (@shri_blueticked)