பாலிவுட் நடிகர்களை எல்லாம் பின்பற்றி தள்ளி இந்திய அளவில் பிரம்மாண்ட நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் பிரபாஸ். அதற்கு மிக முக்கிய காரணம் ராஜமவுடு இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி படம் தான். அதனைத் தொடர்ந்து சாஷோ, ராதே ஷியாம், ஆதி புரூஸ், சலார் மற்றும் கல்கி 2898 ஏடி என சினிமாவையே அலறவிடும் அளவுக்கு பிரம்மாண்டமான படங்களை கொடுத்து கலக்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து இயக்குனர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ராஜா சாப் திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ள நிலையில் சஞ்சய் தத், நிதி அகர்வால், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் டி ஜி விஷ்வ பிரசாத் தயாரிக்கின்றார்.

இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படியான நிலையில் தி ராஜா சாப் பிரபாஸ் நடித்த ஆதி புரூஸ் படத்தை 186 கோடிக்கு வாங்கி ஆந்திராவில் ரிலீஸ் செய்துள்ளார். ஏற்கனவே தோல்வியை தழுவியே இந்த திரைப்படம் வெறும் 46 கோடி மட்டுமே அங்கு வசூலித்துள்ளது. இதனால் தயாரிப்பாளருக்கு 140 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காக பிரபாஸ் தி ராஜா சாப் படத்தில் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்து வருகிறாராம். பணத்தின் வசூலை பொருத்து சம்பளத்தை பேசி கொள்ளலாம் என்று கூறிவிட்டு பிரபாஸ் இந்த படத்தில் நடித்து வருகிறார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
