ஆள விடுங்கன்னு எஸ்கேப் ஆன சூர்யா.. வெற்றிமாறனிடம் வசமாக சிக்கிக்கொண்ட சிம்பு.. முதல் நாளே இப்படியா..?

By Nanthini on ஆனி 18, 2025

Spread the love

சினிமாவை பொறுத்தவரையில் படம் இயக்குவதில் ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருப்பது வழக்கம்தான். சில இயக்குனர்கள் என்ன எடுக்க வேண்டும் என்பதை தெளிவாக திட்டமிட்டுக்கொண்டு படப்பிடிப்பை தொடங்குவார்கள். ஆனால் ஒரு சிலர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பிறகு என்ன எடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். அந்த லிஸ்டில் இயக்குனர் பாலாவும் ஒருவர் தான். அவரிடம் படப்பிடிப்பு தளத்தில் சிக்கி மாட்டிக்கொண்டவர்கள் ஏராளம். அதேசமயம் கே எஸ் ரவிக்குமார், ஹரி மற்றும் சுரேஷ் கிருஷ்ணா போன்ற இயக்குனர்கள் படத்தை மிக வேகமாக எடுத்து முடித்து விடுவார்கள். ஆனால் இயக்குனர் வெற்றிமாறன் மற்ற இயக்குனர்களுக்கு நேர்மாறாக தான் செயல்படுவார்.

இருந்தாலும் வெற்றிமாறன் ரெம்ப ஸ்ட்ரிக்ட் தான்... அஜித் பட இயக்குனரை.? கதற  வைத்த சம்பவம்.!

   

ஒரு மாதம் எடுக்கப்பட்ட காட்சிகளை எடிட் செய்து பார்த்துவிட்டு இது நன்றாக இல்லை மறுபடியும் எடுப்போம் என்ற சொல்லி தயாரிப்பாளரை கதற விடுவார். அப்படிதான் விடுதலை முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை எடுக்க நான்கு வருடங்கள் எடுத்துக் கொண்டார். வெறும் 8 நாள் நடித்தால் போதும் என்ற விஜய் சேதுபதியை அழைத்து வந்து வருட கணக்கில் அவரை அலையவிட்டு விட்டார். இதன் காரணமாகவே வாடிவாசல் படத்திலிருந்து சூர்யா விலகி விட்டார். அந்தப் படம் டிராப்பானதும் சிம்புவை வைத்து ஒரு புதிய படத்தை வெற்றிமாறன் தொடங்கியுள்ளார். வடசென்னை மையப்படுத்தி இந்த திரைப்படத்தின் கதையை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

   

Actor Silambarasan TR Director Vetrimaaran Movie Title Rumored To Be Rajan  Vagaiyara | சிம்பு X வெற்றிமாறன் படத்தின் டைட்டில் இதுதான் லீக் ஆன தகவல்  Movies News in Tamil

 

நேற்று இந்த படத்தின் டெஸ்ட் சூட் நடந்த நிலையில் சென்னை எக்மோரில் உள்ள போலீஸ் மியூசியத்தில் படபிடிப்பு நடந்துள்ளது. அங்கு ஒரு நாளுக்கு ஷூட்டிங் நடத்த 15 லட்சம் ரூபாய் செலவாகும். காலை முதல் மதியம் வரை காட்சிகளை எடுத்த வெற்றிமாறன் அதனை எடிட்டிங் செய்து பார்த்துவிட்டு தனக்கு திருப்தி ஏற்படாததால் காலையில் எடுத்து அதே காட்சிகளை மதியமும் எடுத்துள்ளார். இதனால் ஒரு நாளில் எடுக்க வேண்டிய டெஸ்ட் சூட் இரண்டு நாளாக மாறியுள்ளது. அதேசமயம் செலவும் 25 லட்சம் வரை அதிகரித்துள்ளது. டெஸ்ட் சூட்டிலேயே வெற்றிமாறனை பற்றி சிம்பு நன்றாக புரிந்து கொண்டிருப்பார். இதனாலையே இந்த படத்தை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்ற கட்டாயத்தில் சிம்பு இருப்பார் என தெரிகிறது.