பல கோடிக்கு விற்கப்பட்ட “கூலி” படத்தின் வெளிநாட்டு உரிமம்… தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனை…!!

By Soundarya on ஆனி 18, 2025

Spread the love

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கூலி. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சுருதிஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் க்ளிம்பாஸ் மற்றும் சிக்கிடு vibe பாடலின் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் படத்தின் வெளிநாட்டு உரிமமானது 81 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .இதை தவிர அண்டை மாநிலங்களின் விநியோகஸ்தர்களுக்கான உரிமமும் அதிக தொகைக்கு பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே கூலி படம் தான் அதிக தொகைக்கு விற்கப்பட்ட முதல் தமிழ் படம் என்று கூறப்படுகிறது.