இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே சூர்யா அவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, அவர் உடல் நலம் குன்றிய போது அதற்காக நண்பர்கள், குடும்பங்கள், சினிமா பிரபலங்கள் போன்ற பலரும் நலம் விசாரித்து வந்தார்கள், அதற்காக அவர் நன்றி தெரிவித்து ஸ்வீட் ஒன்று இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா துறையில் அஜித்தை வைத்து வாலி என்ற படத்தை எஸ் ஜே சூர்யா இயக்கி அப்படம் பெரு வெற்றியை கண்டது, அதன் பின் தமிழக அளவில் மிகப் பிரபலமான இயக்குனராக மாறினார், அதற்கு அடுத்தவாறு விஜய் ஜோதிகா வைத்து குஷி படத்தை இயக்கி தமிழ் சினிமா துறையில் அடுத்த கட்ட இயக்குனராக நகர்ந்து சென்றார், அதன்பின்னதாக அவர் நடிப்பின் மேல் ஆர்வம் கொண்டு “நியூ” என்ற படத்தை இயக்கி அப்பிடத்தில் நடித்து ஓரளவு வசூலை பெற்று தமிழ் சினிமா துறையில் தான் நடிகன் என்று சிறப்பான நடிப்பை வெளிக்கொண்டு வந்து தன்னை நிரூபித்துள்ளார்,
அடுத்தடுத்து படங்கள் நடிக்க ஆரம்பித்தார், அதன் வரிசையில் அன்பே ஆயிரம், நியூட்டன் இரண்டாம் விதி, திருமகன், வியாபாரி, போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து அதன் பின்னதாக பெரிய இயக்குனர்களில் இயக்கத்திலும் பெரிய ஹீரோக்களின் நடிப்பில் வெளியாகும் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வெளிவந்த நண்பன், புலி, மாநாடு போன்ற படங்களில் முன்னணி துணை நடிகராக வலம் வந்தார் தற்போது மார்க்கண்டினி, ஜிகர்தண்டா போன்ற படங்களில் பிரபல வில்லனாகவும் வளம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது பாபி சிம்ஹா மற்றும் வேதிகா நடிப்பு வெளிவந்த “ரஸாக்கர்” எனும் பீரியட் படத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது, அப்படத்தில் சிறப்பு விருந்தினராக எஸ் ஜே சூர்யா அவர்களை அழைத்து இருந்தார்கள், தற்போது அவரால் வர முடியவில்லை என்று இணையத்தில் பதிவு ஒன்று வெளியிட்டு இருந்தார். அந்தப் பதிவில் “அன்புக்குரிய என் சகோதரர் தம்பி பாபி சிம்ஹா அவர்களே” கடுமையான காய்ச்சல் காரணத்தால் என்னால் அந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை,
அதற்காக நான் வருந்துகிறேன், இப்படம் வெற்றி அடைய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர், படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன் என்று தன்னால் வர முடியாத நிகழ்ச்சிக்காக பாபி சிம்ஹாவிடமும் அப்பட குழுவினர் இடமும் அன்பாக இணையத்தில் மூலம் எஸ் ஜே சூர்யா கேட்டுக்கொண்டார். தற்போதைய எஸ் ஜே சூர்யா அவர்களுக்கு உடல் நலம் நல்லபடியாக மீண்டு வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Dear @actorsimha thambi due to the heavy viral fever I couldn’t attend the function very very sorry & apologies thambi ???? and wishing you a great launch and wishing a great success of RASAKKAR all the very best to the producer garu & director garu & team ???????????????????????????????? pic.twitter.com/1Yp6rZhoDf
— S J Suryah (@iam_SJSuryah) February 20, 2024
