ஷூட்டிங் ஸ்பாட்டில் கோவை சரளாவை கூப்பிட்டு கலாய்த்த கவுண்டமணி… நக்கல் மன்னன் -னு சும்மாவா சொன்னாங்க…

By Begam on மாசி 22, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகை கோவை சரளா நகைச்சுவையில் கொடிக்கட்டி பறந்தவர். நகைச்சுவை நடிகை மனோராமவுக்கு அடுத்து தமிழ் சினிமாவில் காமெடி இளவரசியாக ஜொலித்துக்கொண்டிருப்பவர். பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நகைச்சுவையாக நடிகையா திகழ்ந்து வருகிறார். கோவை மாவட்டத்தை சேர்ந்த இவர் 9 வகுப்பு வரை தான் படித்திருக்கிறார்.

   

சிறுவயதில் இருந்தே மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கினார். அதன்பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கினார். இவர் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். தொடர்ந்து, 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பட துறையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். தென்னிந்திய மொழிகளில் 800 படங்களுக்கும் மேல் நடித்து விட்டவர்.

   

 

குறிப்பாக இவர் நடிகர் கவுண்டமணி, நடிகர் வடிவேலு, நடிகர் செந்தில் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தற்பொழுதும் அந்த காமெடிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளனர் என்றால் அது மிகையாகாது.

#image_title

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் நடிகர் கவுண்டமணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ‘ஷூட்டிங் ஸ்பாட்டில் ஃபர்ஸ்ட் டைம் போகும் போது, அவர் என் பேரு என்னனு கேட்டாரு.  கோவை சரளா ன்னு சொன்னேன். அது என்ன கோவை சரளா..? அப்படின்னு கலாய்ச்சாரு. அத நீங்க பத்திரிக்கையாளர் கிட்ட தான் கேக்கணும்னு சொல்லிட்டேன். எப்பயும் அதே போல கிண்டலா தான் பேசிப்போம். அப்படியே ஒரு அண்ணன் தங்கை உறவு எங்களுக்குள்ள வந்துருச்சு’ என்று மனம் திறந்து கூறியிருந்தார். இதோ அந்த பேட்டி…