ஒரே குடும்பத்தில் 3 தலைமுறை நடிகைகள்… மகள், பேத்தியை ஓவர்டேக் செய்த பாட்டி.. கீர்த்தி சுரேஷின் பாட்டி இத்தனை படங்களில் நடிச்சுருக்காங்களா..?

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தும் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்தும் குறுகிய காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்தார்.

   

தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா அளவில் வலம் வந்து கொண்டுள்ளார்.  பாலிவுட்டில் அட்லீ தயாரிப்பில் உருவாகும் பேபி ஜான் என்கிற இப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இத்திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் முதன்முறையாக கால் பதிக்க உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

நடிகை கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அவரது தந்தை சுரேஷ் மேனன் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர்களை பற்றியெல்லாம் தெரியும்.ஆனால் கீர்த்தி சுரேஷின் பாட்டியும் பிரபல நடிகை தான் இது உங்களுக்கு தெரியுமா..?

ஆம். நடிகை கீர்த்தி சுரேஷின் கீர்த்தி பாட்டி சரோஜா, அவர்கள் தமிழில் சிவகார்த்திகேயனின் ரெமோ, கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி விஜய் ஸ்ரீ இயக்கத்தில் 2019ல் வெளிவந்த ‘தா தா 87’ திரைப்படத்தில் ஹீரோயினே இவர் தான். இப்படி திரையுலகில் மகள், பேத்தியை ஓவர்டேக் செய்து கலக்கி கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா.