இவர் சினிமாவுக்கு லாயக்கு இல்லை.. வேறு ஏதாவது வேலைக்கு போக சொல்லு.. வாலியை மட்டம் தட்டி பேசிய MS விஸ்வநாதன்..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய பாடல் வரிகளால் கோலோச்சியவர் கவிஞர் வாலி. அவரின் ஆரம்ப காலத்தில் கண்ணதாசனோடும், 80 மற்றும் 90 களில்  வைரமுத்துவோடும். 2000களில் முத்துகுமார் உள்ளிட்ட இளம் கவிஞர்களோடும் போட்டி போட்டார். ஆனால் அவர் அனைவரிடமும் நட்பாகப் பழகினார்.

ஆனால் எந்தகாலத்திலும் அவர் நம்பர் 1 கவிஞராக இருந்தார். எப்போதும் இரண்டாவது இடத்திலேயே இருந்தார். ஆனால் 60 ஆண்டுகளில் அவருக்கு பாடல் எழுத வாய்ப்புக் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலை உருவானதே இல்லை. அந்த அளவுக்கு இறக்கும் வரையிலும் பிஸியாக இருந்தார்.

   

வாலியின் தனிச்சிறப்பே அவர் யாரிடமும் சண்டை போட்டு பிரிந்து செல்ல மாட்டார் என்பதுதான். எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா தொடங்கி அனிருத் வரை அவர் பாடல்கள் எழுத காரணமாக அவரின் இந்த பழகும் தன்மைதான். சினிமாவில் நுழைந்து ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் எழுதிக் குவித்திருந்தாலும் ஆரம்பத்தில் அவருக்கு சினிமா வாய்ப்புகள் எளிதில் கிடைக்கவில்லை.

திருச்சியில் இருந்து சென்னை வந்து பாடல் வாய்ப்புகளுக்காக அவர் அலைந்து கொண்டிருந்த போதும் அவரின் நண்பரும் நடிகருமான வி கோபாலகிருஷ்ணன் இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதனிடம் வாலியை அழைத்து சென்றுள்ளார். அவர் எழுதி வைத்திருந்த சில பாடல்  வரிகளைப் படித்த எம் எஸ் வி, வாலியின் நண்பரிடம் “இவர் சினிமாவில் பெரிய ஆளாக வரமுடியாது. நல்லா படிச்சுருக்காரு, பேசாம வேறு எதாவது வேலைக்கு போக சொல்லு’ என முகத்திலடிப்பது போல சொல்லி அனுப்பிவிட்டாராம்.

இதைக் கேட்ட வாலிக்கு நம்பிக்கையே போய்விட்டதாம். ஏனென்றால் அப்போது மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்து கொண்டிருந்தார் எம் எஸ் விஸ்வநாதன். அவரே நம் வரிகளை இப்படி ஒதுக்கிவிட்டாரே என்று. ஆனாலும் மனம் தளராமல் வாய்ப்புகளை தேடி இறுதியாக கற்பகம் என்ற படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பை பெற்றார்.

அந்த பாடல் ஹிட்டாகவே அதன் பின்னர் தன்னை நிராகரித்த எம் எஸ் வி இசையில்தான் அவர் அதிக பாடல்களை எழுதினார் என்பது அனைவரும் அறிந்ததே. காதலர்கள் போல மோதலலில்தான் பிறந்துள்ளது எம் எஸ் வி, வாலி கூட்டணியும்.