நண்பனின் மனைவியுடன் தகராறு… பழிவாங்க பச்சிளம் குழந்தையை கொன்று பிளாஸ்டிக் கவரில் சுற்றிய கொடூரம்… வடமாநில தொழிலாளி செய்த வெறிச்செயல்…!

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஆறு வயது சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இஜாமுல் ஷேக் என்பவர் தனது மனைவி மற்றும் 6 வயது மகள் ஷனாத்துடன் பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார். இவருடைய நண்பரான யூசெப் என்பவருக்கும் இஜாமுலின் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் முன்விரோதம் காரணமாக பழிவாங்கும் நோக்கில் இந்த விபரீதச் செயலை யூசெப் செய்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நைசாகப் பேசி ஆள் நடமாட்டமற்ற இடத்திற்கு அழைத்துச் சென்ற யூசெப், அங்கு வைத்து சிறுமியைத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் ஆதாரங்களை மறைக்க சிறுமியின் உடலை ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி, ஒயிட்ஃபீல்டு பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு அருகே வீசிவிட்டுத் தப்பிச் சென்றார். நீண்ட நேரமாகியும் குழந்தை வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் யூசெப் குழந்தையை அழைத்துச் செல்வது உறுதியானதை அடுத்து தலைமறைவாக இருந்த அவரைப் போலீசார் கைது செய்தனர். நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட சாதாரண தகராறில் ஒரு பச்சிளம் குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த இந்தச் சம்பவம் பெங்களூரு மக்களிடையே கடும் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

44 minutes ago

“விஜய் அலைக்கு பலியான உதயசூரியன்!”… தி.மு.க-வின் படுதோல்விக்குக் காரணமான அந்த 7 ரகசியங்கள்… ஒரு சிறப்புப் பார்வை…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் கோட்டையாகக் கருதப்பட்ட பல இடங்கள் தகர்க்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களுடன் ஆட்சியமைக்க…

54 minutes ago

“கஜானா காலி!”… ‘தளபதி’யின் திட்டங்களால் அரசுக்கு பேராபத்தா?…மே 7-க்கு அப்புறம் கச்சேரி தெரியும்… நிதி நிபுணர்களின் பகீர் எச்சரிக்கை…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும்…

1 மணத்தியாலம் ago

“என்றென்றும் நீங்களே எங்கள் முதல்வர்!”… கொளத்தூர் மக்களின் சர்ப்ரைஸ் வரவேற்பு.. கண்கலங்கிய மு.க.ஸ்டாலின்…!!!

தமிழக அரசியல் களத்தையே அதிர வைக்கும் விதமாக, கொளத்தூர் தொகுதியில் மூன்று முறை தொடர் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், இந்த…

2 மணத்தியாலங்கள் ago

பெங்களூருவில் பயங்கரம்..! 2.5 வயது மகனை 5 லட்சத்திற்கு விற்ற தாய்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த துரோகம்…!!

பெங்களூருவில் தனது 2.5 வயது மகனை அவனது தாயே 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகத் தந்தை புகார் அளித்துள்ள சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

“பணம் இருந்தா என்ன வேணா பண்ணலாம்” தாகத்தைத் தீர்க்க பல கோடி செலவில் ஹெலிகாப்டர்.. பனிப்பாறைத் தண்ணீரைக் குடிக்கப் பறந்த கோடீஸ்வரரின் மகள்… கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!

சமூக வலைதளங்களில் ஒரு கோடீஸ்வரரின் மகளான அன்னா லிண்டே பகிர்ந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மியாமியைச் சேர்ந்த…

2 மணத்தியாலங்கள் ago