siva

திடீரென Bigg Boss வீட்டிற்குள் நுழைந்த போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்த சிவகார்த்திகேயன்.. வெளியான ப்ரோமோ..

By admin on ஐப்பசி 25, 2024

Spread the love

Bigg Boss Tamil Season 8 ஷோ தற்போது பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த சீசன் தொடங்கி மூன்றாவது வாரம் நிறைவடைய உள்ள நிலையில் இப்போது தான் போட்டி வேகம் எடுத்தது போல் இருக்கிறது. போட்டியாளர்கள் அனைவரும் கேமரா இருக்கிறது என்பதை மறந்து தங்களது குணங்களை வெளிக்காட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

   

மற்ற சீசன்களை விடவும் இந்த சீசனில் மக்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு காரணம் உலகநாயகன் கமல்ஹாசன், பிக்பாஸை கடந்த ஏழு சீசன்களாக தொகுத்து வழங்கி வந்திருந்தார். தற்போது இந்த சீசனில் அவர் தொகுத்து வழங்கவில்லை என்ற விலகியதை அடுத்து விஜய் சேதுபதி பிக் பாஸ் சீசன் 8 தொகுத்து வழங்க இருக்கிறார் என்றது தான். எதிர்பார்ப்புக்கு ஏற்றபடியே முதல் வாரம் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை மிகவும் நன்றாக கொண்டு சென்று மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி விட்டார்.

   

ஆனால் இரண்டாவது வாரத்தில் சற்று விஜய் சேதுபதிக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் தான் வந்தது. அதற்கு காரணம் அவர் ஹவுஸ் மேட்சை மட்டம் தட்டி பேசியது தான் என்று இணையவாசிகள் பேசி வருகின்றனர். கமல்ஹாசன் யாரையுமே மட்டம் தட்டி பேச மாட்டார் தன்மையாகத்தான் பேசுவார் விஜய் சேதுபதி பட்டு பட்டு என்று பேசி விடுகிறார் என்று அனைவரும் கூறி வருகின்றனர். இனி இந்த வாரம் இவர் எப்படி நிகழ்ச்சியை கொண்டு செல்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

இதற்கிடையில் இன்று பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இல் மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி ஆகி இருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் தான் அமரன். வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறை தான் அமரன் படமாக உருவாக்கி இருக்கிறார்கள். இந்த படத்தின் பிரமோஷன் காரணத்துக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் அவர்களை பார்த்த ஹவுஸ்மேட்ஸ் மிகவும் அதிர்ச்சியில் ஷாக் ஆயினர். அதற்கு பிறகு அமரன் திரைப்படத்தின் ப்ரோமோவை ஹவுஸ்மேட்ஸ்க்கு போட்டுக்காட்டி படத்தை பற்றி பேசியிருக்கிறார் சிவகார்த்திகேயன். அதையும் மீறி அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் யூனிட்டி தான் முக்கியம் என்பது போல் கருத்தும் கூறியிருக்கிறார். தற்போது இந்த ப்ரோமோ வெளியாகி பிக் பாஸ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று இரவு பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.