நவம்பர் மாதத்தில் OTT-யில் வெளியாகும் படங்கள் என்னென்ன….? இதோ மொத்த லிஸ்ட்…!!

By Soundarya on அக்டோபர் 25, 2024

Spread the love

வரும் நவம்பர் மாதம் OTTயில் ரிலீஸ் ஆக உள்ள படங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

#image_title

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படம் அமரன். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  இதன் OTT உரிமையை கைப்பற்றியுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் நவம்பர் மாதம் இறுதியில் இந்த படத்தை OTTயில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது.

   
   

#image_title

 

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் பிரதர். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், பூமிகா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

#image_title

ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், ரஜினி வெளியான திரைப்படம் வேட்டையன் திரைப்படம். இவரோடு அமிதாபச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். படம்  அக்டோபர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. . இப்படம் வருகிற நவம்பர் 7-ந் தேதி அமேசான் பிரைம் OTT-யில் ரிலீஸ் ஆகிறது .

#image_title

கொரட்டலா சிவா இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான திரைப்படம் தேவரா-1. இப்படமானது தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இப்படம் வருகிற நவம்பர் 8-ந் தேதி நெட்பிளிக்ஸ் OTTயில் ரிலீஸ் ஆகிறது.

#image_title

போஸ் வெங்கட் விமல் நடிப்பில் சார் என்ற படத்தை தற்போது இயக்கி உள்ளார் . இந்த படம் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார்.  கடந்த அக்டோபர் 18ந் தேதி வெளியான இப்படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் OTTக்கு வருகிறது.