AR ரஹ்மான் மாதிரி சிவகார்த்தியேன் ஒரு ஆள வச்சிருக்காரு….. வலைப்பேச்சு அந்தணன் தடாலடி…!!

By Soundarya on ஐப்பசி 25, 2024

Spread the love

சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்று பிரபல காமெடியனாக வெற்றி பெற்ற தான் நடிகர் சிவகார்த்திகேயன். அதன்பிறகு தொலைக்காட்சி மூலமாக சினிமாவிற்குள் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் காரணமாக ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

#image_title

சிவகார்த்திகேயன் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் தனது 21-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த ஆடியோ லாங்ச் நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி ஒன்றில் அஜித் சாரை சந்தித்தேன். “Welcome to big league”ன்னு சொன்னார்.

   
   

#image_title

 

எனக்கு ஒண்ணுமே புரியலன்னு சொன்னேன். “உங்கள் வளர்ச்சியைக் கண்டு பலர் Insecured-ஆ இருக்காங்கன்னா, You are into big league”னு சொன்னார் இது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கையில் விஜய் துப்பாக்கி கொடுத்ததும் ஒருபுறம் பேசி வருகிறார்கள். இந்நிலையில் வலைப்பேச்சு அந்தணன் பேட்டி ஒன்றில், எஆர் ரஹ்மான் ஒருகாலத்தில் ரொம்ப சாதாரணமாக இருந்தார். திடீரென்று வேறு மாதிரி ஹேர் ஸ்டைல் மாத்தி மாறிவிட்டார்.

#image_title

இப்படி தான் டிரெஸ் பண்ணனும், ஹேர் ஸ்டைல் பண்ணனும் சொல்றதுக்கு ஆள் இருக்காங்க அதேபோல சிவகார்த்திகேயனும் ஒரு ஆளை வச்சிருக்காரு. ஏனெனில் இவ்வளவு தெளிவா என்னைக்கோ அழுததை இன்னைக்கு கொண்டு வந்து மேட்ச் பன்றாரு. தன்னை உயர்த்தி காட்ட இதுபோல பன்றாரு என்று கூறியுள்ளார்.