சத்தியமா எனக்கு தெரியாது…. அம்மா சொல்லி தான் தெரியும்…. தலைநகரம் படம் குறித்து புலம்பிய சுந்தர் சி…!!

By Soundarya on ஐப்பசி 25, 2024

Spread the love

சுந்தர்.சி ஆரம்பகாலகட்டத்தில் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராக பணிபுரிந்தார். 1995-ம் ஆண்டு முறை மாமன் என்ற திரைப்படம் மூலமாக இவர் இயக்குநராக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை பாணி படங்கள், பேய் படங்கள் குவிவதற்கு வித்திட்டவர். 1996-ஆம் வருடம்  வெளிவந்த ‘உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படம், இயக்குநர் சுந்தர்.சி-க்கு மாபெரும் வெற்றியைப் பெற்று கொடுத்தது. 90 கிட்ஸ் ரசித்த காதல் கலந்த காமெடி திரைப்படம்.

#image_title

அதன்பிறகு படத்தை இயக்கி அதில் நடித்தும் வருகிறார். அரண்மனை 2, அரண்மனை 3  உள்ளிட்ட படங்களை இயக்கி நடித்துள்ளார். இவர் நடித்த படங்களில் ஒன்று தலைநகரம். இந்த படம் இயக்குனர் சுராஜ் இயக்கியிருந்தார். இவர் இயக்கும் படங்கள் என்றாலே அதில் காமெடி அசத்தலாக இருக்கும்.

   
   

#image_title

 

அதிலும் அவர் இயக்கிய இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற வடிவேலுவின் காமெடி காட்சிகளால் இப்போதும் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது என்றே சொல்லலாம். இந்த படத்தில் நாய் சேகராக, மாமன் மகள் என நினைத்து கதாநாயகியை ஒரு தலையாக காதலிக்கும் கேரக்டரில் பார்ப்போரை ல் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் வடிவேலு.

#image_title

 இந்நிலையில் தலைநகரம் படம் குறித்து பேசிய சுந்தர் சி, தலைநகரம் படம் மோகன்லால் நடித்த மலையாள ரீமேக்ன்னு பலவருஷமா எனக்கு சாத்தியமா தெரியாது. என் அம்மா தான் அந்த படத்தை பார்த்துக்கொண்டிருந்தபோது எனக்கு இதை சொன்னாங்க. சுராஜ் எனக்கே அந்த கதையை வித்துட்டாரு. எனக்கு இந்த விஷயமே தெரியாது என்று பகிர்ந்துள்ளார்.