#image_title
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக ஆகியிருக்கிறார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்திலிருந்து வந்து தனது விடாமுயற்சி உழைப்பினால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது கேரியரை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் அதன் மூலம் சினிமாவில் நுழைந்தார்.
ஆரம்பத்தில் காமெடி கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாக திருப்புமுனையைப் பெற்றார். அதற்கடுத்ததாக கமர்சியல் படங்களில் நடித்தார். வேலைக்காரன் சீமராஜா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு இவர் நடித்த அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் கேரியரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அனைவரையும் பாராட்டுகளையும் பெற்றிருந்தார். தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது படத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
மேலும் யாரும் எதிர்பாராத விதமாக சுதா கொங்கரா இயக்கும் SK25 படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டது. அதன்படி இன்று SK25 படமானது தொடங்கிவிட்டது. அதில் ஜெயம் ரவி அதர்வா ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…