முதல் நாளே இவ்வளவா?… சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தின் முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா…?

By Nanthini on புரட்டாதி 6, 2025

Spread the love

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் மதராஸி . விறுவிறுப்பான ஆக்ஷன் திரைக்கதை கொண்ட இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி நடித்திருப்பார். வில்லனாக வித்யுத் ஜம்வால் நடித்திருப்பார். இவர்களுடன் பிஜு மேனன், விக்ராந்த், ஷபீர் கல்லக்கல் நடித்துள்ளனர். சுதீப் எலமோன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஸ்ரீலட்சுமி மூவிஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே 100 கோடி வசூலிக்கும் என்று பேசப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் படம் வெளியீட்டுக்கு முன்பே கணிசமான தொகையை பெற்றுவிட்டதாகவும் செய்தி பரவியது. சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் இந்த படத்திற்கும் ஓடிடி உரிமையின் 40 கோடிக்கும், சாட்டிலைட் உரிமை 26 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

   

நேற்று பிரமாண்டமாக வெளியான இந்த திரைப்படம் முதல் நாளில் அனைத்து மொழிகளிலும் 13 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றும் நாளையும் தொடர் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சனிக்கிழமை முன் விற்பனையில் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் 10 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.