இதெல்லாம் ரொம்ப அராஜகம்?.. ஈவு இரக்கமில்லாமல் இளைஞரை போட்டு தாக்கிய கேரள போலீஸ்… ஷாக்கிங் வீடியோ…!

By Divyamayakannan on புரட்டாதி 6, 2025

Spread the love

கேரளா குன்னம்குளம் காவல் நிலையத்தில் இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரை போலீசார் கடுமையாக தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பி.எஸ்.சுஜித் என்ற இளைஞர்தான் தாக்கப்பட்டவர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சசி தரூர் சமூக வலைபக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார். இந்த கொடூர தாக்குதலினால் காவல் நிலையம் சித்திரவதைக் கூடங்கமாக மாறி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இது தனிப்பட்ட சம்பவம் அல்ல அரசியலில் ஏற்பட்டுள்ள ஆழமான சீர்கேட்டின் அறிகுறி என்று கூறியுள்ளார்.

முதலமைச்சர் பினராய் விஜயன் பொறுப்பேற்க வேண்டும்  மற்றும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கடுமையான நடவடிக்கையாக பணியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மனித உரிமை மீறலில் ஈடுபட்ட, மனசாட்சியே இல்லாத அவர்கள் மீது நடவடிக்கை கட்டாயம் எடுக்க வேண்டும். இதுவரை இந்த விவகாரத்திற்கு மாநில அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

   

இருப்பினும் திரிசூர் சரகத்தின் துணை ஆய்வாளர் (டிஐஜி) எஸ்.ஹரிசங்கர் இரண்டு வருடங்களுக்கு முன்பே விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்ததாக கூறிவருகிறார். மற்றும் ஊதிய உயர்வையும் இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் பொய்யாக கூறி வருகிறார். டிஜிபி மற்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் இருவருமே குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று வரை பணியில் தான் இருக்கிறார்கள். பெயரளவிலே அவர்களுடைய தண்டனை இருக்கிறது என்றும் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.