தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தனது காமெடி மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கின்றார். இவர் முதன்முதலாக யோகி என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பல கேலி கிண்டல்களை சந்தித்தாலும், அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது விடாமுயற்சியால் முன்னணி நட்சத்திரமாக தற்போது ஜொலித்து வருகிறார்.

பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இவர் இல்லாமல் இருப்பதே கிடையாது. தமிழ் சினிமாவில் தொடங்கி தற்போது பாலிவுட் சினிமா வரை சென்று கலக்கி வருகிறார். தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களின் திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நயன்தாராவுடன் சேர்ந்து நடித்த புகழின் உச்சிக்கு சென்று விட்டார்.

மேலும் மண்டேலா, கூர்கா திரைப்படங்களில் தன்னை கதாநாயகனாகவும் காட்டி அசத்தியிருக்கிறார். சமீபத்தில் நடிகர் யோகி பாபு தனது மகள் பரணி கார்த்திகாவின் முதல் பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். இந்த நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்கு பல முன்னணி நட்சத்திரங்கள் வருகை தந்தனர். யோகிபாபுவுக்கு மிகவும் நெருக்கமான நண்பர் சிவகார்த்திகேயன். இவர்கள் இருவரும் இணைந்து காக்கி சட்டை, மான்கராத்தே, மிஸ்டர் லோக்கல் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு சிவகார்த்திகேயன் வருவார் என்று கடைசி நிமிடம் வரை யோகி பாபு கார்த்திருந்தாராம். ஆனால் அவர் வரவே இல்லை. இதற்கு காரணம் நிகழ்ச்சிக்கு வந்தால் கட்டாயம் பத்திரிகையாளர்கள் அங்கு வருவார்கள். அவர்கள் டி இமான் கூறியதை பற்றி துருவித் துருவி கேள்வி கேட்பார்கள். இதனால் இந்த நிகழ்ச்சிக்கு வருவதை தவிர்த்து விட்டாராம். இருப்பினும் யோகி பாபு சிவகார்த்திகேயன் வராததால் வருத்தத்தில் இருந்ததாக கூறப்பட்டது.
