தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல வில்லனாக வளம் வந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதன் பிறகு பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் சில திரைப்படங்களை இவரே தயாரித்து இயக்கியும் இருக்கிறார். தற்போது சரக்கு என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் சென்சாரில் சிக்கி பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது.

தற்போது செய்தியாளர் சந்திப்பை நடத்தி தனது பக்கம் நியாயத்தை மன்சூர் அலிகான் பேசி வருகிறார். மன்சூர் அலிகான் எப்போதும் யாரைப் பற்றியும் பயப்படாதவர். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார். இதற்காக பலமுறை சிக்கலிலும் மாட்டி இருக்கிறார். தற்போது செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் லோகேஷ் கனகராஜை பாலஸ்தீனத்திற்கு அழைத்துள்ளார்.

500 கோடி செலவு செய்து லட்சம் பேருக்கு வேலை கொடுத்து ஒன்றரை வருடம் படாத பாடுபட்டு ஆயிரம் கோடி வசூலுக்கு உழைத்திருக்கின்றோம். ஆனால் ஒரு கையெழுத்து போட்டு அரசியல்வாதி பத்தாயிரம் கோடி, 20 ஆயிரம் கோடி ஆட்டையை போட்டு போகிறான். அவங்களுக்கு திட்டுறது போல் ஒரு கதையில் நடிப்பதற்கு நான் ரெடி. லொகேஷ் என்னை வைத்து அப்படி ஒரு படம் எடுக்கலாம். அதை விட்டு தம்மா தூண்டு ரோலுக்கு அவ்ளோ பெரிய பில்டப்.

என்கூட வாங்க பாலஸ்தீனத்திற்கு விடுதலை வாங்கி கொடுக்கலாம். வாங்க எல்லாரும் போய் மிலிட்டரி தளத்தையும் அழிச்சிட்டு வரலாம். அப்பாவி மக்கள் இறந்து போறாங்க. அதை விட்டுட்டு சும்மா டம்மி துப்பாக்கி, அட்டகத்திய கையில கொடுத்துட்டு என்ன ஆகப்போகுது. வாங்க லோகேஷ் போருக்கு போவோம் என்று அழைப்பு விடுத்து இருக்கிறார். அதாவது லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் தனக்கு மிகச் சிறிய ரோல் கொடுத்திருக்கிறார் என்பதை அவர் குத்தி காட்டி பேசி இருக்கிறார்.

