பிரபல நடிகரான க்ரிஷ் நேற்று முன்தினம் தனது சிங்கிள் வாழ்க்கைக்கு பாய் பாய் சொல்லிவிட்டு திருமண வாழ்க்கையில் இணைந்து இருக்கின்றார் .
நடிகர் க்ரிஷ் இவரை பற்றி பெரிய அளவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 1994 ஆம் ஆண்டு பிறந்த இவர் கல்லூரி படிக்கும் போதே சினிமாவில் அறிமுகமானார். ஆனந்த் கிருஷ்ணன் என்பவருடன் இயக்கத்தில் வெளியான மெட்ரோ என்ற திரைப்படத்தின் மூலமாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர் 2018 ஆம் ஆண்டு ராஜா ரங்குஸ்கி, அதைத்தொடர்ந்து Blood Money, கடந்து 2022 ஆம் ஆண்டு பிஸ்தா ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். திரைப்படங்களைத் தாண்டி சமூகப் பணியிலும் அதிகளவு தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தாக்குதலால் பாதிக்கப்பட்ட பலருக்கும் உதவி செய்தார்.
இவர் நேற்று முன்தினம் 12ம் தேதி தனது நீண்ட நாள் காதலியான ஹஸ்னாவை திருமணம் செய்து கொண்டிருக்கின்றார். இவர்களின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் பங்கேற்றன.
தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன், தனுஷ், அருண் பாண்டியன் மற்றும் ஆர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் திருமணத்திற்கு சென்று அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.