ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சண்டு திருமணம் ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த நிலையில் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவிற்கு ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் தனியாக வந்துள்ளார்.
மேலும் ஐஸ்வர்யாராயின் கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சன் அவரது பெற்றோருடன் வந்துள்ளார். இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராய் இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், இந்திரன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2007-ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.. சமீப காலமாக ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் விவாகரத்து செய்ய போவதாக செய்திகள் உலா வந்தது. அதன் பிறகு ஆராதியா படிக்கும் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பட்சமும் ஜோடியாக கலந்து கொண்டதால் பிரச்சினைகள் தீர்ந்து விட்டது என ரசிகர்கள் நினைத்தனர்.

#image_title
இந்த நிலையில் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சன் தனது பெற்றோருடனும், ஐஸ்வர்யா ராய் தனது மகளுடனும் தனித்தனியே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதனால் மீண்டும் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்களா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
Dekho chaand Aya.. chaand Nazar Aya ❤️ #AishwaryaRai love the Hair pulled back n this Vibe she’s giving✨️😍 pic.twitter.com/QSCdQjVjqw
— Ruth (@Ruth4ashab) July 13, 2024