கோலிவுட்டின் கமர்சியல் ஹீரோவாக தற்போது உருவெடுத்துள்ளவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கி இன்று தமிழ் சினிமாவை கொண்டாடும் அளவுக்கு முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். டாக்டர், டான், மாவீரன் மற்றும் அயலான் என வரிசையாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயன் இறுதியாக அமரன் திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியக்க வைத்தார். இந்த படத்தின் மூலம் 300 கோடி ரூபாய் வசூலித்த ஹீரோ என்ற பெயரையும் பெற்றுள்ளார். அமரன் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசன் தயாரித்திருந்தார். உலகம் முழுவதும் சுமார் 350 கோடி ரூபாய் வரை இந்த திரைப்படம் வசூலித்திருந்தது.

திரையரங்குகளிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. சில நாட்களுக்கு முன்புதான் இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அமரன் திரைப்படத்தை முடித்த கையோடு சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதில் ரவி மோகன் மற்றும் அதர்வா உள்ளிட்டோரும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கின்றனர். அமரன் திரைப்படம் எப்படி தன்னுடைய கேரியரை உச்சத்திற்கு கொண்டு சென்றதோ அதனைப் போலவே பராசக்தி திரைப்படமும் கொண்டு போகும் என்ற நம்பிக்கையில் சிவகார்த்திகேயன் உள்ளார். இந்த திரைப்படத்தை புறநானூறு என்ற பெயரில் சூர்யாவை வைத்து முதலில் சுதா இயக்க இருந்த நிலையில் அதன் பிறகு சூர்யா விலகியதால் சிவகார்த்திகேயன் கமிட் ஆனார்.

இப்படியான நிலையில் இந்திய அளவில் கவனம் ஈர்த்த இயக்குனர்களில் ஒருவரான ஏ ஆர் முருகதாசுடன் சிவகார்த்திகேயன் இணைந்தார். திரைப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்த நிலையில் சல்மான் கானை வைத்து முருகதாஸ் இயக்கவிருக்கும் படத்தின் வேலைகளை தொடங்க சொல்லி அவருக்கு பிரஷர் வந்ததால் இப்படத்தின் சூட்டிங்கை நிறுத்திவிட்டு அவர் மும்பைக்குச் சென்று விட்டதாக தகவல் பரவியது. தற்போது ஷூட்டிங் மீண்டும் தொடங்க உள்ளதாகவும் இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. சிவகார்த்திகேயனை போலவே ஏ ஆர் முருகதாஸ் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். அவர் கடைசியாக ஹிட் கொடுத்து நீண்ட காலம் ஆகிவிட்டதால் இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

இந்த நிலையில் சிவக்கார்த்திகேயன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அதனை முன்னிட்டு சிவகார்த்திகேயனும் ஏ.ஆர் முருகதாஸும் இணையும் படத்தின் பெயர் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. இப்படியான நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ள படத்திற்கு மதராஸி என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அமரன் மற்றும் மாவீரன் என பழைய படங்களின் டைட்டிலில் தான் சிவகார்த்திகேயன் நடித்து வருகின்றார். அதன்படி தற்போதும் அர்ஜுன் நடிப்பில் வெளியான மதராஸி என்ற படத்தின் டைட்டிலை தான் இந்த படத்திற்கும் வைத்துள்ளனர். சிவகார்த்திகேயன் ஏன் ஒரே பார்முலாவை பின்பற்றுகிறார் என ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.
