தென்னிந்திய திரை உலகில் 70 மற்றும் 80 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை லதா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களில் பிஸியான நடிகையாக இருந்தார். கடந்த 1973 ஆம் ஆண்டில் எம்ஜிஆர் லீட் கேரக்டரில் நடித்திருந்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அவருடைய புகைப்படம் உலகம் சுற்றும் வாலிபன் டீமில் காட்டப்பட, புதுமுகம் ஒருவரை தேடிக் கொண்டிருந்த எம்ஜிஆர் தன்னுடைய அம்மாவை கன்வென்ஸ் செய்து தன்னை நடிக்க வைத்ததாக லதாவே பலமுறை கூறிஉள்ளார்.
தமிழ் சினிமாவை ஆட்சி செய்த நடிகர்களில் முக்கியமானவர் எம்ஜிஆர். பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ள இவர் மூன்று படங்களை தயாரித்து இயக்கியுள்ளார். இந்த மூன்று படங்களுமே பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில் இதில் இரண்டு படங்களில் நாயகியாக நடித்தவர் தான் நடிகை லதா. எம்ஜிஆர் இயக்கிய இரண்டாவது படமான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் தான் இவர் திரைத்துறையில் அறிமுகமான முதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து எம்ஜிஆர் உடன் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள லதா அவரின் கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்திலும் நடிகையாக நடித்திருந்தார்.
இந்த படம் எம்ஜிஆர் முதல்வரான பிறகு வெளியானது. எம்ஜிஆர் முதல்வரான பிறகு நடிப்பிலிருந்து விலகிய நிலையில் லதா அடுத்து முன்னணி நடிகர்களாக இருந்த கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் நடிக்க தொடங்கினார். இவர்களுடன் சேர்ந்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். மற்ற ஹீரோக்களுடன் இவர் இணைந்து நடித்திருந்தாலும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லதா பற்றி பல கிசுகிசுக்கள் அதிகம் பரவியது. இருந்தாலும் ஒரு கட்டத்தில் அது எதுவும் உண்மை இல்லை என தெரியவந்தது.
இப்படியான நிலையில் நடிகை லதா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு மலையாள நடிகர் ஒருவர் ப்ரொபோஸ் செய்ததை மனம் திறந்து பேசி உள்ளார். அதாவது மலையாள நடிகர் ஜெயன் உடன் இணைந்து லவ் இன் சிங்கப்பூர் என்ற படத்தில் இணைந்து நடித்த போது தன்னை காதலிப்பதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து தான் யோசிப்பதற்கு முன்னதாகவே அவர் விபத்தில் மரணம் அடைந்தது தனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது என லதா தனது பேட்டியில் பேசியுள்ளார்.