உங்களோட ஒரு படத்திலாவது நடிக்கணும்… நடிகை பத்மினியிடம் ஓப்பனாக சொன்ன சிவாஜி கணேசன்…சேந்து நடித்தது எத்தனை படம் தெரியுமா?

By vinoth on ஆவணி 27, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கணேசனாக நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது அவர் நடித்த பல நாடகங்கள் தமிழகத்தின் பல மூளைகளில் அரங்கேறி கணேசன் (அப்போது சிவாஜி என்ற பட்டம் கொடுக்கப்படவில்லை) புகழைப் பரப்பின.

சிவாஜி கணேசன் நாடகக் கம்பெனியில் சேர்ந்ததே ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.  இதுபற்றி அவரே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதில் “எங்கள் ஊரில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் போடுவார்கள். அதைப் பார்க்கும் போது எனக்கும் நடிக்க வேண்டும் என ஆசை வந்துவிட்டது. அதனால் நான் நாடகக் கம்பெனிக்கு சென்று அப்பா அம்மா இறந்துவிட்டார்கள் என சொல்லி சேர்ந்துவிட்டேன். அதிலிருந்து 6 வருடங்கள் நான் என் பெற்றோரைப் பார்க்கவேயில்லை. ஒரு வேளை நான் இறந்துவிட்டேன் எனக் கூட அவர்கள் நினைத்திருப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.

   

வளர்ந்த பின்னர் பெண் வேடத்தில் நடித்த சிவாஜி அதன் மூலம் பராசக்தி படத்தின் கதாநாயகன் வேடத்தைப் பெற்றார். அதன் பிறகு அவருக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். 2002 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை தொடர்ந்து நடித்து வந்தார்.

   

சிவாஜி கணேசன் தன்னுடைய சினிமா கேரியரில் அதிக படங்களில் சேர்ந்து நடித்தது பத்மினியோடுதான். இருவரும் இணைந்து 59 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். சிவாஜி சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே பத்மினி சினிமாவில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டார் நடிகையாக இருந்தார்.

 

அப்போது சிவாஜி எம் ஆர் ராதாவின் குழுவில் ஒருவராக நாடகங்களில் நடித்து வந்துள்ளார். எம் ஆர் ராதாவின் இழந்த காதல் நாடகத்தைக் காண பத்மினி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். அதைப் பார்க்க வந்த பத்மினியிடம் சிவாஜி கணேசன் “நான் உங்கள் நடிப்புக்கு ரசிகன். உங்களோடு சேர்ந்து ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை” எனக் கூறினாராம்.

ஆனால் சிவாஜி கதாநாயகன் ஆனபின்னர் இருவரும் இணைந்து 59 படங்களில் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகனும் கதாநாயகியும் அதிக படங்களில் இணைந்து நடித்ததில் இந்த கூட்டணியே சாதனைப் படைத்துள்ளது.