CINEMA
Cute-ஆக இருக்கும் இந்த குழந்தை விஜய் டிவியின் பிரபலம்.. யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்..!!
சோசியல் மீடியாவில் திரை பிரபலங்களின் சிறு வயது புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகும். அந்த வகையில் விஜய் டிவி பிரபலத்தின் சிறு வயது புகைப்படம் வேகமாக பரவி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் மூலம் ரக்சன் தொகுப்பாளராக அறிமுகமானார். அவரும் ஜாக்குலினும் தொகுத்து வழங்கிய சீசன் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ரக்ஷனும் ஜாக்கிலினும் தொகுத்து வழங்கிய விதம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்ததால் அடுத்தடுத்து சீசன்களையும் அவர்களே தொகுத்து வழங்கினார்கள். ரக்ஷனுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டதாம்.
தொகுப்பாளராக மட்டும் அல்லாமல் நடிகராகவும் ரக்சன் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் ரக்ஷன் நடிகர் துல்கர் சல்மானின் நண்பனாக நடித்திருப்பார். அதன் பிறகு அவருக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மறக்குமா நெஞ்சம் என்ற திரைப்படத்தில் ரக்சன் ஹீரோவாக நடித்துள்ளார்.
பள்ளி பருவத்தை நினைவு கூறும் வகையில் அந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் வேட்டையன் திரைப்படத்திலும் ரக்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். தற்போது ரக்ஷனும் மணிமேகலையும் இணைந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர். இந்த நிலையில் ரக்ஷனின் சிறு வயது போட்டோவை பார்த்த ரசிகர்கள் அப்பவும் க்யூட்டாக இருக்கிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.