CINEMA
காமெடி நடிகர் பிஜிலி ரமேஷ் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.. இரங்கல்..!
பிளாக் ஷீப் யூட்யூப் சேனலில் பிராங்க் வீடியோ மூலமாக ஓவர் நைட்டில் பிரபலமானவர்தான் பிஜிலி ரமேஷ். ஹிப் ஹாப் ஆதி நடித்த நட்பே துணை படத்தில் இவருக்கு நடிகராக நடிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து பொன்மகள் வந்தாள், ஆடை, கோமாளி மற்றும் ஜாம்பி உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து கலக்கினார்.
குடித்துவிட்டு சாலையில் சென்ற இவரை பிராங்க் செய்கிறோம் என பிடித்து கலாய்க்க தமிழ் சினிமாவுக்கு திடீரென ஒரு நடிகரே கிடைத்துவிட்டார். ஆனால் அதே குடி தற்போது அவருடைய வாழ்க்கையை பறித்துள்ளது. குடிபோதை தனது வாழ்க்கையை மாற்றிவிட்டது என்றும் யாரும் குடிக்க வேண்டாம் என்றும் எழுந்து கூட நிற்க முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடந்த பிஜிலி ரமேஷ் சமீபத்தில் சில யூ டியூப் சேனல்களுக்கு பேட்டியை அளித்திருந்தார்.
இந்த நிலையில் உடல் நல குறைவு காரணமாக நேற்று இரவு 9 மணி அளவில் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இவருடைய இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு எம்ஜிஆர் நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் நடைபெறுகிறது. இவருடைய மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.