தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கணேசனாக நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வெளியாகி அதுவரை காணாத வெற்றியைப் பெற்றது.
அந்த படம் அவருக்கு மட்டும் திருப்புமுனையாக அமையாமல் தமிழ் சினிமாவுக்கே ஒரு ட்ரண்ட் செட்டராக அமைந்தது. அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. 25 ஆண்டுகளுக்கும் மேல் கதாநாயகனாகவு, அதன் பிறகு 20 ஆண்டுகள் குணச்சித்திர நடிகராகவும் கலக்கினார்.
சிவாஜியின் தொடக்க காலம் மிகவும் ஏறுமுகமாக இருந்தது. ஆனால் அவரின் வீழ்ச்சி அவர் அரசியலில் காலெடி எடுத்து வைத்த போது தொடங்கியது. தனியாக அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். அதனால் அவரின் சொத்துகள் பலவற்றை இழந்தார். அதே போல அவரின் பேத்தியை ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். அந்த திருமணத்தில் சிவாஜிக்கு முழு விருப்பம் இல்லை என சொல்லப்படுகிறது.
அதன் பிறகு சில ஆண்டுகளில் சுதாகர் ஒரு வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றார். அப்போது ஒரு நாள் சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து தன்னுடைய மன வேதனையை எல்லாம் வெளிப்படுத்தினாராம் சிவாஜி. இது சம்மந்தமாக ஒரு நேர்காணலில் பேசியுள்ள தாணு, “என் பேத்தியைப் பாக்கும் போது கஷ்டமா இருக்குடா. இந்த கஷ்டத்துடன் நான் எதுக்குயா வாழனும்? எங்க அண்ணன் எம்.ஜி.ஆர் நல்ல பேர், புகழ், செல்வாக்கோடு போய்விட்டார். நான்தான்யா பஸ்ஸ மிஸ் பண்ணிட்டேன் மனசு கஷ்டமா இருக்கு ” எனப் பேசினார். அவர் அப்படி பேசிய அடுத்த ஒரு மாதத்துக்குள்ளாகவே உடல்நலம் சரியில்லாமல் இறந்துவிட்டார்” என தாணு அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.