Categories: சினிமா

தருமி சீன்ல நடிச்சு முடிச்சுட்டு பயந்த நாகேஷ்… அதுக்குக் காரணம் சிவாஜிதானா?… ஆனா நடந்த ட்விஸ்ட்டே வேற!

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள் மூலமாகக் கலக்கியவர் நாகேஷ். 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அவரை தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் என்றும் சொல்வர். கவுண்டமணி வருகைக்குப் பிறகும் பல படங்களில் நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

அவர் தன்னுடைய மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது கிட்டத்தட்ட அனைத்து தமிழ் படங்களிலும் நடித்தார். ஒரு நாளைக்கு ஷிஃப்ட் கணக்கில் ஐந்து படங்களில் கூட நடித்துள்ளார். இதனால் எந்த பட ஷூட்டிங்குக்கும் அவரால் சொன்ன நேரத்தில் செல்ல முடியாதாம். அதனால் அவர் வர தாமதமானால் எம் ஜி ஆர், சிவாஜி கூட அவருக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவானதாம்.

நடிப்பின் பல்கலைக்கழகம் எனப் பெயர் வாங்கிய சிவாஜி கணேசனோடு நாகேஷ் போட்டி போட்டு நடித்த படம் என்றால் அது திருவிளையாடல் படம்தான். அந்த படத்தில் நாகேஷ் தருமி எனும் புலவராக நகைச்சுவை வேடத்தில் நடித்திருப்பார். மன்னர் அறிவித்த போட்டிக்கான பாடல் எழுத முடியாமல் புலம்பும் அவருக்கு சிவபெருமானே வந்து பாடலைக் கொடுத்து செல்வார்.

அந்த பாடலில் நக்கீரர் குற்றம் கண்டுபிடிக்க, அங்கே பயத்தில் அவர் பேசும் வசனங்களும், பின்னர் சிவபெருமானாகிய சிவாஜி கணேசனிடம் வந்து புலம்பும் காட்சியும் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் காட்சி. அந்த காட்சியில் நடிக்கும் போதே சிவாஜியை விட நாகேஷ் சிறப்பாக நடித்துள்ளார் என பட்க்குழுவினர் பாராட்ட ஆரம்பித்தார்களாம்.

அதனால் இந்த காட்சியை சிவாஜி கட் செய்து குறைத்துவிடுவாரோ என நாகேஷ் பயந்துகொண்டே இருந்தாராம். ஆனால் சிவாஜி இயக்குனர் ஏ பி நாகராஜனை அழைத்து ‘இந்த காட்சியை அப்படியே வைக்க வேண்டும். நன்றாக வந்திருக்கிறது. ஒரு சிறு வசனத்தைக் கூட நீக்கக் கூடாது’ என சொல்லிவிட்டாராம். அதைக் கேட்ட பிறகுதான் நாகேஷுக்கு நிம்மதியாக இருந்ததாம்.

vinoth

Recent Posts

அரசுப் பள்ளியா?… தனியார் பள்ளியா?… கடனாளியாகி மகனைப் படிக்க வைக்கும்… நடுத்தரக் குடும்பங்களின் அதிர்ச்சி முகங்கள்…!!

அரசுப் பள்ளியா அல்லது தனியார் பள்ளியா என்ற குழப்பம் பல நடுத்தரக் குடும்பங்களை வாட்டும் ஒரு பொதுவான கேள்வி. உங்கள்…

4 minutes ago

விஐபி போனாதான் ரோடு போகுமா?… உழைக்கும் மனிதனின் உயிருக்கு விலையே இல்லையா?… மிதிவண்டி ஓட்டுநரைத் தள்ளிவிட்ட காவலர்… வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

மும்பையில் விஐபி வாகனம் செல்லும் போது போக்குவரத்து காவலர்களால் மிதிவண்டி ஓட்டுநர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அவமரியாதை குறித்து சிவசேனா…

5 minutes ago

உயிருடன் வந்த மனைவி… கட்டிப்பிடித்து அழுத கணவர்… குழந்தைகளை காணோமே… கண்கலங்க வைக்கும் வீடியோ வைரல்…!!

நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரமான வெள்ளப் பேரழிவிற்குப் பிறகு, பல நாட்களாகக் காணாமல் போன மனைவி உயிருடன் மீண்டு வந்து கணவரிடம்…

6 minutes ago

ஐயோ கொடுமையே… காதலியுடன் லுடோ விளையாடிய… பாஜக இளைஞர் தலைவர் படுகொலை… கணவனுடன் சேர்ந்து மனைவி செய்த அதிர்ச்சி காரியம்… பதறவைக்கும் சம்பவம்…!

சிவானி தனது கணவனின் வீட்டில் தனது காதலரான பாஜக இளைஞர் தலைவர் புஷ்பேந்திர லோதியை ரகசியமாகச் சந்திக்க அழைக்க, அவரும்…

25 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா… போதையில் மனைவியைக் குத்திக்கொன்றுவிட்டு… கால் தவறி விழுந்துவிட்டார் என்று நாடகமாடிய கணவன்… கொளத்தூரில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கொளத்தூர், அன்னை சத்ய நகரைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளி சரண்ராஜ் (36), தனது மனைவி முத்துவாரியம்மாளை (38) திங்கட்கிழமை இரவு…

30 minutes ago

ஐயோ பாவம்… யாரென்று தெரியாமலேயே போன உயிர்… மின்தாக்குதல் விபத்தில் வெளிமாநிலத் தொழிலாளி பலியான சோகம்… நெஞ்சை பதறவைக்கும் CCTV காட்சி…!

மதுநாப்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சித்திக் நகர், அஞ்சையா நகர் பகுதியில் மின்தாக்குதலுக்குள்ளாகி புலம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…

35 minutes ago