Categories: சினிமா

வள்ளலாரின் பக்தி பாடலை லேசாக மாற்றி காதல் பாடலாக மாற்றிய வாலி.. பலே கில்லாடிதான் வாலிப கவிஞர்!

Spread the love

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய பாடல் வரிகளால் கோலோச்சியவர் கவிஞர் வாலி. அவரின் ஆரம்ப காலத்தில் கண்ணதாசனோடும், 80 மற்றும் 90 களில்  வைரமுத்துவோடும். 2000களில் முத்துகுமார் உள்ளிட்ட இளம் கவிஞர்களோடும் போட்டி போட்டார். ஆனால் அவர் அனைவரிடமும் நட்பாகப் பழகினார். இதனால் அவரை ரசிகர்கள் வாலிபக் கவிஞர் என்றே அழைத்தனர்.

திரையுலகில் வாலிக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர் நடிகர் எம் ஜி ஆர். தன்னுடைய படங்களுக்கு முதலில் கண்ணதாசனையே தொடர்ந்து பாடல்கள் எழுத வைத்து வந்தார் எம் ஜி ஆர். ஆனால் இருவருக்கும் இடையே அரசியல் ரீதியாக ஒரு பிரிவு வந்தது. எம் ஜி ஆர் தீவிரமாக திமுகவில் இயங்கி வந்த நிலையில், கண்ணதாசன் திமுகவில் இருந்து காங்கிரஸுக்கு தாவினார். அதன் பின்னர் கண்ணதாசன் எம் ஜி ஆரைக் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். அப்போதுதான் எம் ஜி ஆர் வாலியை தன்னுடைய ஆஸ்தான கவியாக மாற்றிக் கொண்டார். அதன் பின்னர் பல நடிகர்களுக்கு எழுதிய வாலி, கடைசியாக சிவகார்த்திகேயன் வரைக்கும் பாடல்கள் எழுதியுள்ளார்.

வாலிக்கு மிகவும் பிடித்தது வள்ளலார் பாடல்கள்தானாம். அதில் இருந்துதான் தான் நிறைய வரிகளைப் பெற்றுள்ளதாக அவரே சொல்லியுள்ளார். இந்நிலையில் வள்ளலாரின் ஒரு பக்தி பாடல் வரியை லேசாக மாற்றி அதையே காதல் பாடலாக மாற்றியுள்ளார் வாலி.

1978-ம் ஆண்டு அறிஞர் அண்ணாவின் கதை மற்றும் கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் வெளியான படம் வண்டிக்காரன் மகன். ஜெய்சங்கர், ஜெயச்சித்ரா, எம்.ஆர்.ராதா, மனோரமா, அசோகன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்துக்காக எம் எஸ் விஸ்வநாதன் இசையில் வாலி எழுதிய பாடல்தான் “மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே” என்ற பாடல். இன்றளவும் இசை ரசிகர்களால் கேட்டு ரசிக்கப்படும் பாடலாக இருக்கும் இந்த பாடல் வள்ளலார் சிவபெருமானை நினைத்து பக்தியில் உருகி பாடிய ஒரு பாடலில் இருந்து உந்துதல் பெற்ற பாடல் வரிதான்.

வள்ளலார் எழுதிய அந்த பாடலின் இடையில் ‘மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங் காற்றே’ என்ற வரியைதான் மாற்றி எழுதியுள்ளார் வாலி.

வள்ளலார் எழுதிய அந்த பாடல்

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த

குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே

ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண்ணீரே

உகந்ததண்ணீரிடைமலர்ந்த சுகந்த மண மலரே

மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங் காற்றே

மென்காற்றில் விளைசுகமே சுகத்தில் உறும்பயனே ஆடையிலே யெனைமணந்த மணவாளா பொதுவில்

ஆடுகின்ற  அரசே என் அலங்கல் அணிந்தருளே.

 

vinoth

Recent Posts

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

16 minutes ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

27 minutes ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

40 minutes ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

40 minutes ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

46 minutes ago

“இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சலுகை ரத்து” கைவிரித்த அமெரிக்கா… வெனிசுலாவை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் – கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பூகம்பம்..!!

கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…

56 minutes ago