Categories: சினிமா

சுறா இல்ல..  இந்த படம்தான் 50 ஆவது படமா வரணும்னு விஜய் ஆசைப்பட்டிருக்கார்.. கொடுமை என்னன்னா அந்த படமும் flopதான்!

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று புகழின் உச்சத்தில் இருக்கிறார் நடிகர் விஜய், தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.

தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். இடையிடையே ஹிட் கொடுத்திருந்தாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் கில்லி படத்துக்கு முன்பே உருவானது. அதனால் அதற்கு முந்தைய படங்களில் எல்லாம் தன்னுடைய படத்தில் துறைசார்ந்த பிரபலங்கள் இருக்க வேண்டும், அது படத்தின் பிஸ்னஸுக்கு உதவும் என விரும்புவார்.

2000 களில் தன்னுடைய ரூட்டைக் கண்டுபிடித்து கமர்ஷியல் மாஸ் மசாலா படங்களாக நடித்துத் தள்ளினார். வழக்கமாக நடிகர் தங்களுடைய 50 ஆவது படத்தை கண்ணும் கருத்துமாக நல்ல கதை, நல்ல இயக்குனரை வைத்து எடுக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக விஜய் சுறா என்ற மொக்கைப் படத்தைக் கொடுத்தார். அந்த படத்தின் இயக்குனர் எஸ் பி ராஜ்குமார் அதற்கு முன்னர் பெரிதாக எந்த ஹிட் படத்தையும் கொடுத்ததில்லை.

அந்த படத்துக்குக் கதை மட்டும் எழுதவே, அவர் முதலில் வந்துள்ளார். ஆனால் அவர் சொன்ன கதைப் பிடிக்கவே விஜய்யும் அவர் தந்தையும் ராஜ்குமாரையே இயக்குனர் ஆக்கிவிட்டனர். படம் படு திராபையாக உருவாகி விஜய் ரசிகர்களாலேயே விமர்சிக்கப்படும் அளவுக்கு இருந்தது.

இந்நிலையில் தன்னுடைய ஐம்பதாவது படம் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது. வில்லு படத்தின் ரிலீஸ் சமயத்தில் “எல்லோரும் 50 ஆவது படத்தைப் பற்றி பெருமையாக சொல்வார்கள். எனக்கு இப்போது என்ன தோன்றுகிறது என்றால் வில்லு படமே என்னுடைய 50 ஆவது படமாக வந்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது. இப்படி வைத்துக் கொள்ளுங்களேன், இரண்டு படங்களுக்கு முன்பாகவே நான் 50 ஆவது படம் கொடுத்துள்ளேன் என்று” என ஆர்வமாக பேசியுள்ளார். ஆனால் வில்லு படமும் ஒரு தோல்விப் படமாகவே அமைந்தது என்பதுதான் சோகம்.

vinoth

Recent Posts

21 லட்சம் ஃபாலோயர்ஸ் இருந்தும் 33 ஓட்டுதானா?… ஜோதிடருக்கு சொந்த ஊரிலேயே காத்திருந்த பேரதிர்ச்சி… இணையத்தை சூடேற்றும் ராஜஸ்தான் தேர்தல் கூத்து….!

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களை (Followers) வைத்திருப்பவர்கள், நிஜ வாழ்க்கையிலும் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்…

55 seconds ago

ஆற்றில் நுரை பொங்க சோப்பு தான் காரணமா?…. “அந்த சோப்பு பேர் என்ன?”…. சிரிப்பதா.. அழுவதா?….. அரசைக் கிழித்துத் தொங்கப்போட்ட நாம் தமிழர் சீமான்….!

ஆறுகளில் நுரை பொங்கி வழியும் அவலநிலைக்கும், கழிவுநீர் மாசுபடுவதற்கும் மக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்புவே காரணம் என சுற்றுச்சூழல்…

5 minutes ago

இரவோடு இரவாக மாறிய அதிகாரிகள்…. தமிழக நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம்…. வெளியான திடீர் அறிவிப்பு….!

தமிழக நிர்வாக நலன் மற்றும் பணியிடங்களை முறைப்படுத்தும் நோக்கில், பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் துறைச் செயலாளர்கள் உட்பட முக்கிய…

9 minutes ago

அன்பில் மகேஸ் கைதால் வெடித்த சர்ச்சை…. திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு கோர்ட் கொடுத்த ரிலீஃப்…. நள்ளிரவில் அதிரடி திருப்பம்….!

சர்ச்சை பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு சென்னை அம்பத்தூர்…

14 minutes ago