தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கணேசனாக நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வெளியாகி அதுவரை காணாத வெற்றியைப் பெற்றது.
அந்த படம் அவருக்கு மட்டும் திருப்புமுனையாக அமையாமல் தமிழ் சினிமாவுக்கே ஒரு ட்ரண்ட் செட்டராக அமைந்தது. அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. 25 ஆண்டுகளுக்கும் மேல் கதாநாயகனாகவு, அதன் பிறகு 20 ஆண்டுகள் குணச்சித்திர நடிகராகவும் கலக்கினார்.
ஆனால் சிவாஜியின் நடிப்பு ஓவர் ஆக்டிங் என விமர்சனங்கள் வந்தன. அது விமர்சகர்களிடம் இருந்து மட்டுமில்லை. அவரின் சக நடிகர்களிடம் இருந்து வந்துள்ளது. சிவாஜியின் நடிப்பை விமர்சித்தவர்களில் முக்கியமானவர்கள் எம் ஆர் ராதா, சோ ராமசாமி, சௌகார் ஜானகி போன்றவர்கள்தான்.

#image_title
சௌகார் ஜானகிக்கும் சிவாஜி கணேசனுக்கும் ஒரு சிறு முரண்பாடு இருந்ததாக ஏவிஎம் நிறுவன தயாரிப்பாளர் ஏவிஎம் குமரன் தெரிவித்துள்ளார். அதில் “சௌகார் ஜானகி அளவாக இங்லீஷ் படத்தில் வருவது போல நடிக்க வேண்டும் என நினைப்பார். ஆனால் சிவாஜியோ நம் மக்களுக்காக மிகவும் உணர்ச்சிவசப்பட்டு நடிப்பார். இதனால் அவர்களுக்கு சிறு முட்டல் மோதல் இருந்தது.
அதுமட்டுமில்லாமல் சௌகார் ஜானகி கொஞ்சம் கோபக்காரர். திடீரென்று கோபப்பட்டு ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்துவிடுவார். அதெல்லாம் சிவாஜிக்கு பிடிக்காது. அதனால் அவர் சௌகார் ஜானகி பக்கம் இல்லாமல் எங்காவது போய்விடுவார். இப்படி அவர்களுக்குள் சிறு முட்டல், மோதல் பிரச்சனை இருந்தது உண்டு. ஆனால் இரண்டு பேருமெ தொழில்முறை நடிகர்கள். அவர்களால் ஷூட்டிங்குக்கு எந்த பிரச்சனையும் வராது” எனக் கூறியுள்ளார்
