தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர்.
பல படங்களை இயக்கி அப்போது பீக்கில் இருந்த பாக்யராஜ் 1982 ஆம் ஆண்டு நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான திரைப்படம்தான் “தூறல் நின்னு போச்சு”. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பாக்யராஜை முன்னணி நடிகர் ஆக்கியது. இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதை உருவாக்கமே மிகவும் வித்தியாசமாக இருக்கும்.
மிகச்சிறந்த காதல் படமாக உருவாக்கப்பட்ட இந்த படம் அப்போது தமிழ் சினிமாவின் வழக்கமான காதல் படமே இல்லை. இந்த படத்தில் பாக்யராஜ் மற்றும் சுலக்ஷனா ஆகிய இருவரும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமனத்தின் மூலம் பார்த்து பழக்கமாகி, காதலில் விழுவார்கள். ஆனால் அவர்கள் திருமணத்துக்கு அவர்களை இணைத்து வைத்தே குடும்பமே பிரச்சனையாக அமையும். அதை எப்படி எதிர்கொண்டு அவர்கள் காதலில் வெற்றி பெற்றார்கள் என்பதே கதை.

#image_title
இதை முதல் பாதி முழுக்க நகைச்சுவையோடும், இரண்டாம் பாகத்தில் உணர்ச்சிப் பூர்வமாகவும் உருவாக்கி இருப்பார் பாக்யராஜ். இந்த படத்தில் பாக்யராஜ் தன்னுடைய நகைச்சுவை காட்சிகளைக் குறைத்துக் கொண்டு முதல் முதலாக சீரியஸ் வேடத்தில் நடித்திருந்தார்.
அது வொர்க் அவுட் ஆகுமா என்பதே அப்போது பாக்யராஜ் உள்ளிட்ட அவரது உதவி இயக்குனர்களுக்கு சந்தேகமாக இருந்ததாம். அதனால் பட ரிலீசின் போது “இதுதான் நம் முதல் தோல்விப் படமாக இருக்கப் போகிறது” என சொல்லிவிட்டாராம். ஆனால் ரிலீஸுக்குப் பிறகு படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் இன்றுவரை கொண்டாடப்படும் ஒரு படமாக அமைந்துள்ளது.
இந்த தகவலை தூறல் நின்னு போச்சு படத்தின் கதை விவாதக் குழுவில் இடம்பெற்ற பாக்யராஜின் உதவி இயக்குனர்களில் ஒருவரான நடிகரும் இயக்குனருமான ஜி எம் குமார் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
