‘பொன்னி’ சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்.. அதிரடியாக என்ட்ரி கொடுத்த சன் டிவி சீரியல் நடிகை..!

By Mahalakshmi on ஆனி 14, 2024

Spread the love

விஜய் டிவியில் 300 எபிசோடுகளை தாண்டி தற்போது ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் இருந்து ஒரு முக்கிய பிரபலம் விலகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது .

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. தொலைக்காட்சியில் பார்க்க முடியாமல் மிஸ் பண்ணுபவர்கள் கூட டிஸ்ட்ரி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்த சீரியல்களை கண்டு களித்து வருகிறார்கள்.

   

   

 

 

அந்த வகையில் கடந்த வருடம் மார்ச் மாதம் தொடங்கப்பட்ட சீரியல் தான் பொன்னி. இந்த சீரியல் அனைத்து தரப்பினர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. மேட்னி ஷோவாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 300 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியல் பெங்காலியில் ஒளிபரப்பான கெட்ச்சரோ என்ற சீரியலின் ரீமேக் ஆகும்.

இந்த சீரியலை மனோஜ் குமார் என்பவர் இயக்கி வருகிறார். ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகனின் தங்கையாக நடித்த வைஷு சுந்தர் ஹீரோயினியாக நடிக்க சபரிநாதன் ஹீரோவாக நடித்த வருகின்றார். அதை தொடர்ந்து ஈஸ்வர் ரகுநாதன், வருன் உதய், ஸ்ரீதேவி அசோக், சூப்பர் குட் கண்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த சீரியலில் முதலில் அம்மா கதாபாத்திரத்தில் ஷமிதா நடித்து வந்த நிலையில் சில காரணங்களினால் இந்த சீரியலில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து இவருக்கு பதிலாக சிந்துஜா இந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தற்போது அவரும் இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகின்றது.

இவருக்கு பதிலாக தற்போது ஆனந்த ராகம், பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரிஹானா நடிக்க உள்ளார் என கூறப்படுகின்றது.ஏற்கனவே ஜெயலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஒருவர் மாற்றப்பட்ட நிலையில் தற்போது மற்றொருவரும் மாற்றப்பட்டு மூன்றாவதாக ரிஹானா கமிட்டாகி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.