அந்த வேலை செய்து ஒரே நாளில் ரூ.10000 சம்பாதிக்கும் சகோதரிகள்… இதுக்கு இவ்வளவு மவுசா..? 24 மணி நேரமும் அமோகமாக நடக்கும் வியாபாரம்..!!

By Soundarya on தை 8, 2026

Spread the love
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் தற்போது நடைபெற்று வரும் புகழ்பெற்ற மாக் மேளா   திருவிழாவில், காஜிப்பூரைச் சேர்ந்த இரண்டு சகோதரிகளின் கடின உழைப்பு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. வேலையின்மை மற்றும் பொருளாதாரச் சிக்கல்கள் குறித்த விவாதங்களுக்கு மத்தியில், இந்தச் சகோதரிகள் பாரம்பரியமான ஆலங்குச்சிகள் மற்றும் வேப்பங்குச்சிகளை (பல் குச்சிகள்) விற்று சாதித்துக் காட்டியுள்ளனர். ஒரு உள்ளூர் யூடியூபரிடம் அவர்கள் பேசுகையில், ஒரே நாளில் மட்டும் சுமார் 10,000 ரூபாய் மதிப்பிலான குச்சிகளை விற்பனை செய்துள்ளதாகக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

கங்கை நதியில் புனித நீராட வரும் பக்தர்கள், அதிகாலையில் பல் துலக்குவதற்கு இந்தப் பாரம்பரியக் குச்சிகளையே அதிகம் விரும்புவதால், அங்கு 24 மணி நேரமும் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இந்த வேலையை ஒரு சுமையாகக் கருதாமல், தன்னம்பிக்கையுடனும் புன்னகையுடனும் செய்யும் அந்தச் சகோதரிகள், எந்தத் தொழிலும் சிறியது அல்ல என்பதை நிரூபித்துள்ளனர். பெரிய முதலீடுகள் ஏதுமின்றி, தங்களின் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு அவர்கள் ஈட்டும் இந்த வருமானம், இன்றைய இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும் ஊக்கமாகவும் அமைந்துள்ளது.